Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.அ.இராச்சியம் உதவ வேண்டும் | பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை

January 18, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.அ.இராச்சியம் உதவ வேண்டும் | பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரியுள்ளார்.

கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹம்மத் பின் ஸயீத் அல் நஹ்யானிடம் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

அல் அரேபியா அலைவரிசைக்கு அளித்த செவ்வியில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான 3 போர்களை சுட்டிக்காட்டிய அவர், பாகிஸ்தான் பாடம் கற்றுவிட்டது எனவும், அமைதியாக வழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்படி செவ்வியில், ”இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கு சம்மதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்சினைகளாக உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு காண முடியும். இதுதான் நான் இந்திய தலைமைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நான் விடுக்கும் செய்தி. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்காற்ற முடியும்.

காஷ்மீரில் நாளுக்கு நாள் மனித உரிமை மீறல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஜம்மு காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமை அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ இந்தியா 2019ம் ஆண்டு ரத்து செய்துவிட்டது. இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இந்தியா உலகுக்கு அறிவிக்க வேண்டும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அயல் நாடுகள். அவை இணைந்து வாழ்ந்தாக வேண்டும். நாட்டில் எந்த அளவுக்கு அமைதி இருக்கிறதோ அந்த அளவுக்கே முன்னேற்றம் இருக்கும். இரு நாடுகளும் சண்டையிட்டுக்கொண்டே இருந்தால் நேரமும் பணமும் வீணாகும். இந்தியாவுடன் நாங்கள் 3 போர்களை சந்தித்துவிட்டோம். இந்த போர்கள் பாகிஸ்தானியர்களுக்கு கூடுதலான துன்பத்தையும், வறுமையையும், வேலைவாய்ப்பின்மையையுமே அளித்திருக்கின்றன. நாங்கள் எங்களுக்கான பாடத்தை தற்போது கற்றுக்கொண்டுவிட்டோம். நாம் அமைதியை விரும்புகிறோம்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹம்மத் பின் ஸயீத் பாகிஸ்தானின் சகோதரர். ஐக்கிய அரபு இராச்சியம் ஒரு சகோதர நாடு. மொஹம்மத் பின் ஸயீத், இந்தியாவுடனும் நல்லுறவுகளைக் கொண்டுள்ளார். இரு நாடுகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதில் அவர் ஒரு முக்கிய பங்காற்ற முடியும். பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டால் நாம் உண்மைத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்’ எனவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

Previous Post

சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post

உலகின் மிக வயதான மனிதரான அருட்சகோதரி 118 ஆவது வயதில் காலமானார்

Next Post
உலகின் மிக வயதான மனிதரான அருட்சகோதரி 118 ஆவது வயதில் காலமானார்

உலகின் மிக வயதான மனிதரான அருட்சகோதரி 118 ஆவது வயதில் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures