Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சங்கானையில் ஏன் கொரோனா ஊசி ஏற்றப்படவில்லை – மக்கள் கேள்வி

June 2, 2021
in News, Politics, Sri Lanka News
0

யாழ். மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஏனைய 13 பிரிவுகளிலும் நேற்று பொதுமக்களுக்கான கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட போதிலும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏன் ஏற்றப்படவில்லை என இந்தப் பிரதேசத்தில் உள்ள சமூகச் செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் ஓரளவுக்கேனும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றியிருக்கின்ற போதிலும், 50,000 வரையான சனத்தொகையைக் கொண்ட வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் இதுவரை 500 வரையான பொதுமக்களுக்குக்கூடத் தடுப்பூசி ஏற்றப்படவில்லை எனவும் மேற்படி சமூக செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டைக் கைவிட்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரியும் சேர்ந்து பி.சி.ஆர். செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் மக்களை பலியெடுத்துக்கொண்டிருக்கும் கொடிய கொரோனா நோய்க்கு பல இலட்சக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கின்றனர். ஒரு தடுப்பூசி கிடைக்காதா என மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், கிடைத்த தடுப்பூசிகளைப் பெற்று பொதுமக்களுக்கு ஏற்றுவதில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏன் ஆர்வம் காட்டவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

04 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், 11 குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள், ஒரு மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், ஒரு மேற்பார்வை குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் அதைவிட பணியாளர்கள், சங்கானை, வட்டுக்கோட்டை, பாணாவெட்டி, போன்ற வைத்தியசாலை ஆளணியினர்  என ஓரளவுக்கேனும் ஆளணியைக்கொண்டு இயங்கும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை 500 வரையான பொதுமக்களுக்கு கூட இதுவரை தடுப்பூசிகளை ஏற்றியிருக்கவில்லை.

எனினும், குறைந்த ஆளணியுடன் இயங்கும் காரைநகர், ஊர்காவற்றுறை உள்ளிட்ட சில சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் கூடிய அடைவு மட்டத்தைக் காட்டியிருக்கின்றனர். ஆனால், 30 வயதுக்கு மேற்பட்ட, ஏறக்குறைய 32 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு தடுப்பூசி ஏற்றக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் இதுவரை அது ஏன் சாத்தியப்படுத்தப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றும் பணி இன்னும் இரு தினங்களில் முடிவடையவுள்ள நிலையில், சுழிபுரம் மத்தி மற்றும் பனிப்புலம் ஆகிய இரு இடங்களில் மாத்திரமே தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எனினும், இரு தினங்களிலாவது வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் ஆளணி உதவியைப் பெற்று பல இடங்களில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை முன்னெடுப்பதன் மூலம்  சில ஆயிரம் வரையான மக்களுக்கேனும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆலோசனை முன்வைத்துள்ளனர்.

Previous Post

ராஜபக்‌ச அரசுடன் தமிழக அரசு உறவை வலுப்படுத்த வேண்டும்

Next Post

இலங்கையில் கொரோனா பலி 1500 ஐ கடந்தது!

Next Post
இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி

இலங்கையில் கொரோனா பலி 1500 ஐ கடந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures