Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மலையக மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும்!

September 13, 2020
in News, Politics, World
0

சம்பளப் பிரச்சினை மட்டுமன்றி மலையக மக்களின் சகல உரிமைகளும் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டுமென்றும் அனைத்து சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும் போதுதான் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் .

எல்லா சிறுபான்மை தலைவர்களும் காலத்துக்கு காலம் பேச்சு வார்த்தை மட்டும் நடத்திவிட்டு சென்றுவிடுகிறார்களே தவிர பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.

நாம் அனைவரும் ஒரு புள்ளியில் இருந்து அதை தீர்த்து வைக்க வேண்டுமென தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் அனுதாப பிரேரணையில் உரையாற்றும் போதே தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்

சிறுபான்மை மக்கள் என்ற வகையில் மலையக மக்களுடன் நாம் எப்போதும் துணையாக இருப்போம். அமரர்களான முன்னாள் அமைச்சர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் வழியில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் எப்போதும் நாம் இணைந்து செயற்படுவோம்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் நான் இறுதியாக கலந்துரையாடிய போது நாங்கள் இருவரும் நாடு தொடர்பிலும் சிறுபான்மை மக்கள் தொடர்பிலும் அதிகநேரம் கலந்துரையாடினோம். இவ்வளவு சீக்கிரம் அவர் எம்மை விட்டு பிரிந்து விடுவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அந்த வகையில் நல்ல நண்பனை நல்ல சகோதரனை சிறந்ததொரு தலைவனை நாம் இழந்திருக்கின்றோம். அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் பல கூட்டங்களிலும் வெளிநாட்டுப் பயணங்களிலும் நாம் சந்தித்து பல்வேறு விடயங்களை கலந்துரையாடியதை நான் நினைத்துப் பார்க்கின்றேன். இப்போதும் அதை மறக்க முடியாதுள்ளது. தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடிய தலைவர் அவர்.

அதிலும் தாம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அதற்கான போராட்டங்களை வெல்வதிலும் அவர் மிக கருத்தாக செயற்பட்டார். அவர் ஆரம்பித்த பணிகளை அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றுவார். அவரது அனைத்து செயற்பாடுகளிலும் நாம் அவருடன் இணைந்து செயற்படுவோம்.

அமரர் தொண்டமானின் மனைவி,பிள்ளைகள் உறவினர்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா மேலும் தெரிவித்தார்.

Previous Post

20ஆவது திருத்த சட்டம் தொடர்பில் புதிய வர்த்தமானி

Next Post

உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்

Next Post

உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures