தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.
தேசியபட்டியல் ஆசனம் தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
தேசிய பட்டியல் ஆசனங்களை யாருக்கு வழங்குவது என்பது குறித்து இன்னமும் ஆராய்ந்து வருகின்றோம், பல வேட்பாளர்கள் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியல் மூலம் நான் நாடாளுமன்றம் செல்வது மாத்திரமே உறுதியாகியுள்ளது என ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை கருத்து தெரிவிக்க மறுத்துள்ள ஹர்சா டி சில்வா ரஞ்சித் மத்தும பண்டாரவும் சஜித் பிரேமதாசவும் இது குறித்த தீர்மானங்களை எடுக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

