கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக நீட்டிக்கப்பட்ட விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளுக்குமான அனைத்து தரங் களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப் படப்படவுள்ளன.
இன்று திங்கட்கிழமை முதல் மாணவர் களின் கற் றல் நடவடிக்கைகளைக் கட்டம் கட்டமாக ஆரம்பிப் பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று முதல் பாடசாலைகளை ஆரம்பிப் பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ள தாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணி 200க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய பாடசாலைகளில் சகல மாணவர்களுக்கும் இன்று கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள தால், தொடர்ந்தும் சகலரும் சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்ற வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார்.

