Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனவாதம் மதவாதத்தை கைவிட்டு வேற்றுமையில் ஒற்றுமை காணப் பாடுபட வேண்டும் ; ஆர். மனோகரன்

August 4, 2020
in News, Politics, World
0

இந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் வரும் பெறுபேற்றின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் ஜனநாயக முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் இனவாதம் மதவாதம் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை காணப் பாடுபட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.

இடம்பெறும் பொதுத் தேர்தல் பற்றியும் அதற்குப் பின்னரான சமூக நிலைமைகள் குறித்தும் அவர் செவ்வாய்க்கிழமை 04.08.2020 ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்ட சர்வமதப் பேரவை மாவட்டத்தில் இன மத நல்லிணக்கத்தினூடாக ஐக்கியப்பட்ட சமூகத்தையும் அதன்வழி அபிவிருத்தியையும் அமைதியையும் அடைந்து கொள்வதற்கு முயற்சித்து வருகின்றது.

அந்தவகையில் மக்களின் கருத்துச் சுதந்திரம் சிந்தனைச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் மத சுதந்திரம் என்பனவற்றை மதித்து தேர்தல் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு நாம் விழிப்புணர்களை அவ்வப்போது வழங்கி வந்திருக்கின்றோம்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற ஒரு அம்சமாக தேர்தல்கள் விளங்குகின்றன.

மனித உரிமைகளின் அடிப்படையில் ஒருவருக்குள்ள விருப்பத் தேர்வையும் அதன் மூலமாகத் தெரிவாகும் மக்கள் பிரதிநிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.

அதேவேளை தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் எந்த சமூக அரசியல் பின்னணிகளைக் கொண்டிருந்தாலும் அவர்கள் இனவாதம் மதவாதம் என்பனவற்றையும் வெறுப்புணர்வுகளையும் விதைக்காமல் சிறந்த சேவையாற்ற முன்வரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

பிரதேசத்தில் அனைத்து மதங்கள் அனைத்து இனங்களுக்கிடையில் நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய சகவாழ்வுக்கான செயற்திட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள தெரிவாகப் போகும் மக்கள் பிரதிநிதிகள் சிரத்தை எடுக்க வேண்டும்.

உள்ளுர் சமூகங்களுக்கிடையில் சமாதானத்திற்கான வழிவகைகளைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன.

பிரதேசத்தில் இன, மத முரண்பாடுகளை பின்புறத்தில் நின்று தூண்டி விட்டு அழிவுகளை ஏற்படுத்தும் அறிவீனர்களாக தெரிவாகப் போகும் மக்கள் பிரதிநிதிகள் இருந்து விடக் கூடாது என்பதே மாவட்ட சர்வமதப் பேரவையின் எதிர்ப்hபர்பாகும்.

நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய சமாதான கலந்துரையாடல் செயற்பாடுகளில் அனைத்து இன மதங்களையும் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் பங்கெடுக்க வேண்டும்.

யுத்தத்திற்குப் பின்னரான சகவாழ்வு, சமாதானம், அபிவிருத்தி, அரசியல் மறுசீரமைப்பு சம்பந்தமாக அமைதிக்கான பாதையில் அனைவரும் இயங்க வேண்டும்.

பல்லின, கலாசார கலந்துரையாடல்களும் வாத விவாதங்களும், முரண்பாடுகளைப் பேசித் தீர்த்து அபிவிருத்திக்கான இலக்குகளை இணைந்து வடிவமைத்துக் கொள்ளும் புதிய கலாச்சாரமும் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

Previous Post

நாசாவால் வெளியிடப்பட்ட இலங்கையின் அரிய புகைப்படம்

Next Post

இன்று இடம்பெற்ற கோர விபத்து- இரு பெண்கள் உயிரிழப்பு

Next Post

இன்று இடம்பெற்ற கோர விபத்து- இரு பெண்கள் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures