Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் போராளி கண்ணதாஸன் விடுதலையானார்!

July 22, 2020
in News, Politics, World
0

யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை விரிவுரையாளரும் முன்னாள் போராளியுமான நல்லை கண்ணதாஸ் கொழும்புமேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக இளைஞர் ஒருவரை கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றினால் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீட்டு மனு மீதான விசாரணை இடம்பெற்று வந்திருந்தது.

இந்நிலையில் சற்று முன்னர் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய சாட்சிகள் இல்லை என தெரிவித்து நீதிமன்று அவரை விடுதலை செய்துள்ளது.
3 ஆண்டுகளாக மேல் முறையீட்டு நீதிமன்றில் குறித்த வழக்குத் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுவந்திருந்தது.

இதேவேளை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த அவர் மிருதங்கக் கலையின் நுணுக்கங்கள் குறித்த “பஞ்ச நடையில் தனியாவர்த்தனம்” என்ற நூலை சிறையிலிருந்தே எழுதி அதனை அவருடைய குடும்பத்தார் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Previous Post

எனது கரங்கள் தூய்மையாகவே உள்ளன ; இரா.சாணக்கியன்

Next Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி ஆதரவாளர்கள் மீது கோடாரியால் தாக்குதல்!

Next Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி ஆதரவாளர்கள் மீது கோடாரியால் தாக்குதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures