தாய்லாந்திலுள்ள பௌத்த விகாரையொன்றில் பிக்குகள் சட்டவிரோதமான முறையில் மிருகங்களை வளர்ததல், இனப்பெருக்கம் செய்தல் போன்ற குற்றங்களைப் புரிந்ததனால் அங்கிருந்த 137 புலிகளை தாய்லாந்து வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.
இது குறித்து தாய்லாந்து வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் இயக்குநர் தெரிவிக்கையில்,
மூன்று புலிகள் தற்போது அங்கிருந்து மீட்கப்பட்டு அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த விலங்குகள் நாட்டிலுள்ள மூன்று வெவ்வேறு அரச விலங்கு புகலிடங்களுக்கு கொண்டுச்செல்லப்படவுள்ளன.
இதேவேளை, குறித்த விகாரையானது சுற்றுலாப்பயணிகளை அதிகம் ஈர்க்கும் பிரபலமான இடம் என்பதனால் இவர்கள் அப்பகுதியை மிருகக்காட்சி சாலையாக மாற்ற முயற்சித்துள்ளனர்.
எனினும், அரசானது குறித்த விலங்குகளை பாதுகாப்பதற்காக அவ்விடத்திலிருந்து மீட்க தீர்மானித்துள்ளது.
மேலும் இவர்கள் விலங்குகளை உரிய முறையில் பராமரிக்காததாலும் வியாபார நோக்கத்திற்காக அவர்களது கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டதாலும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் குறித்த விகாரையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.