சீகிரியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 50 ரூபா பெறுமதியான தண்ணீர் போத்தல் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக எமது செய்திச் சேவைக்கு தகவல் கிடைத்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான வாகன தரிப்பிடத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் இவ்வாறு அதிகரித்த விலையில் தண்ணீர் போத்தல்கள் விற்பனை செய்யப்படுவதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சீகிரியா திட்ட முகாமையாளரான அனுர நிஷாந்தவிடம் எமது செய்திச் சேவை வினவியபோது, பல்வேறு இடங்களில் குடிநீரைப் பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிபிட்டார்.
இந்த நிலையில், வெளிநாட்டவர்கள் குடிநீரை கொள்வனவு செய்யவேண்டிய தேவை இல்லை என்றும் தெரித்துள்ளார்.
இதேநேரம், தனியார் விற்பனை நிலையங்களில் குடிநீர் போத்தல்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுமாயின், அது குறித்து ஆராய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் சீகிரிய திட்ட முகமையாளர் கூறியுள்ளார்.

