2வயது குழந்தையுடன் திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடித்த பொலிஸார்!

2வயது குழந்தையுடன் திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடித்த பொலிஸார்!

பிரம்ரனில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) 2வயது குழந்தையுடன் திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இருப்பினும் இச் சம்பவத்தில் குறித்த 2வயது குழந்தை, நெடுஞ்சாலை 410 மற்றும் Steeles அவெனியு பகுதியில் வீதியின் அருகில் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் சேர்க்கப்பட்டு விட்டதனை பீல் பிராந்திய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரவு 9.30 மணியளவில், இயங்கிக் கொண்டிருந்த ஸ்போட் பயன்பாட்டு வாகனத்திற்குள் குழந்தையை விட்டு விட்டு தாயும் தந்தையும் வணிகவளாகத்தில் உள்ள சலவையகம் ஒன்றிற்குள் சென்றதாகவும், அத்தருணத்திலேயே குறித்த வாகனம் திருடப்பட்டதாகவும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை இவ் வாகத்தை கண்டுபிடிக்க முடியாத நிலையில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வாகனம் கறுப்பு நிற Mazda CX7 எனவும், ஒன்ராறியோ தகட்டு இலக்கம் BYBP371 எனவும், பொலிஸார் வாகனத்தை அடையாளப்படுத்தியுள்ளனர். இவ் வாகனத்தை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News