Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐ.சி.சி. இன் உலகக்கிண்ண இறுதிப் போட்டி இன்று

February 5, 2022
in News, Sports
0
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐ.சி.சி. இன் உலகக்கிண்ண இறுதிப் போட்டி இன்று

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான 14 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனாகப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி அன்டிகுவாவில் இன்று சனிக்கிழமை (05)  நடைபெறவுள்ளது.

16 நாடுகள் 4 குழுக்களில் பங்குபற்றிய உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏ குழுவிலிருந்து இங்கிலாந்தும் பி குழுவிலிருந்து இந்தியாவும் தோல்வி அடையாத அணிகளாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 4 தடவைகள் சம்பியனான இந்தியா, 5ஆவது சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து 8ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

அத்துடன் 4ஆவது  தடவையாக இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளமை விசேட அம்சமாகும். 1998இல் சம்பியனான இங்கிலாந்து 24 வருடங்களின் பின்னர் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக அன்டிகுவாவில் புதன்கிழமை (02) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா 96 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.

ஆப்கானிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் மிகவும் பரபரப்காக செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற 1ஆவது அரை இறுதிப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 15 ஒட்டங்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றது.

இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டி முடிவுகளின் பிரகாரம் இங்கிலாந்தைவிட இந்தியா ஒரளவு பலம்வாய்ந்த அணியாக தென்படுகின்றது.

இந்திய அணியில் தூல் (1 சதம், 1 அரைச் சதம்), ராஜ் பாவா (1 சதம்), ஆங்ரிஷ் ராகுவன்ஷி (1 சதம், 1 அரைச் சதம்), ஷய்க் ராஷீத் (1 அரைச் சதம்), ஹார்நூர் சிங் (1 அரைச்சதம்) ஆகியோர் துடுப்பாடடத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். பந்துவீச்சில் இடதுகை சுழல்பந்துவீச்சாளரான விக்கி ஒஸ்ட்வால் 12 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்து வீரர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜொஷுவா பொய்டன் 13 விக்கெட்களையும் வலதுகை சுழல்பந்துவீச்சாளர் 12 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்த வீரர்களின் திறமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் துடுப்பாட்டத்தில் இந்தியாவும் பந்துவீச்சில் இங்கிலாந்தும் பலசாலிகளாக காணப்படுகின்றன.

எனவே இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மார்க் சூக்கர்பேர்க் பணக்காரர் பட்டியலில் சரிவு

Next Post

சட்டம் கொடுக்காத அதிகாரத்தை தொல்லியல் திணைக்களம் கையில் எடுத்துள்ளது | சுமந்திரன்

Next Post
உள்நாட்டு பொறிமுறையில் ஒரு தீர்வும் தமிழர்களுக்கு கிடைக்காதாம் | குருந்தூர் மலையில் சுமந்திரன்

சட்டம் கொடுக்காத அதிகாரத்தை தொல்லியல் திணைக்களம் கையில் எடுத்துள்ளது | சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சீஷெல்ஸை நான்கு தினங்களுக்குள் இரண்டாவது தடவையாக வெற்றி கொண்டது இலங்கை

சீஷெல்ஸை நான்கு தினங்களுக்குள் இரண்டாவது தடவையாக வெற்றி கொண்டது இலங்கை

October 1, 2026
இலங்கை – அமெரிக்க உறவுகள் மேலும் வலுவடைகின்றன – அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

இலங்கை – அமெரிக்க உறவுகள் மேலும் வலுவடைகின்றன – அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

October 1, 2026
இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000ஐ கடக்கும் அபாயம்

இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000ஐ கடக்கும் அபாயம்

October 1, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே | அமைச்சர் நளிந்த

October 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures