Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தீபாவளியில் வெற்றி பெற்ற அமரன்

November 5, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
தீபாவளியில் வெற்றி பெற்ற அமரன்

தீபாவளி திருநாளன்று வெளியான திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது.

தமிழர்கள் உலக அளவில் பாரம்பரியமாக கொண்டாடும் தீபாவளி திருவிழா நாளன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’, ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘பிரதர்’, கவின் நடிப்பில் உருவான ‘பிளடி பெக்கர்’ ஆகிய மூன்று நேரடி தமிழ் திரைப்படங்களும், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ‘லக்கி பாஸ்கர்’ எனும் திரைப்படமும் வெளியானது.

இந்த நான்கு திரைப்படங்களில்  ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ எனும் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 

இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்திய மதிப்பில் நாற்பது கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

தொடர் விடுமுறை நாட்களில் இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இந்த திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் இந்திய மதிப்பில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள். 

இதனால் இந்தப் படத்தின் வெற்றி விழா திங்கட்கிழமையான இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெறுகிறது. 

இந்தத் தருணத்தில் படத்தின் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ‘அமரன்’ திரைப்படத்திற்கு, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சியின் முன்னணி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்ததால் படத்தின் வசூல் அதிகரித்திருக்கிறது.

‘அமரன்’ திரைப்படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர் ‘ எனும் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி கிடைத்திருக்கிறது என்றும் , இதனைத் தொடர்ந்து கவின், நெல்சன் கூட்டணியில் வெளியான ‘பிளடி பெக்கர்’ படத்திற்கு வரவேற்பு இருந்தது என்றும், இறுதியாக ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ‘பிரதர்’ படத்திற்கு ரசிகர்களிடம் ஆதரவு கிடைத்தது என்றும் திரையுலக வணிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Previous Post

மாதவன் நடிக்கும் ‘அதிர்ஷ்டசாலி’ படத்தின் முதல் பார்வை வெளியீடு

Next Post

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் : சஜித் வெளியிட்ட தகவல்

Next Post
சமல் வீட்டில் அவசரமாக ஒன்று கூடிய ராஜபக்சர்கள்?

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் : சஜித் வெளியிட்ட தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures