151கனடியர்களின் பெயர்கள் உள்ளடங்கிய ISIS கொலைப்பட்டியல் ?
கிட்டத்தட்ட 151 கனடியர்கள் பொலிசாரிடமிருந்து அசௌகரியமான ஒரு தொலைபேசி அழைப்பை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநேகமாக இது ஒன்றுமற்றதாக இருக்கலாம்.ஆனால் இவர்களது பெயர்கள் ISISன் “கொலைப்பட்டியலில்” உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை CBC பெற்றுக்கொண்டுள்ளதாகவும் உலகம் பூராகவும் இருந்து 8,300 பேர்களின் பெயர்கள் இப்பட்டியலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடியர்களின் பெயர்களில் பெரும்பாலானவை பெண்கள் எனவும் பெரும்பான்மையானவை கனடாவின் சிறிய மையங்களில் உள்ளவை எனவும் இவற்றில் சில பெரிய நகரங்களில் உள்ளவர்களினதும் அடங்குகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றன என்பது தெரியவில்லை. இவர்கள் என்ன செய்தார்கள் அல்லது கூறினார்கள் என்பது தெரியாது.
கனடிய தரவுகளை ஆய்வு செய்ததன் மூலம் 71சத விகித மின் அஞ்சல் முகவரிகள் ஊடுருவப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் ஒன்பது கொலைப்பட்டியல்கள் வெளிவந்துள்ளது.
பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளவர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மதிப்பதால் இவர்களது பெயர் விபரங்களை வெளியிட முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.