Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

13ஐ தீயிட்டு கொழுத்தி பௌத்த தேரர்கள் போராட்டம்

February 8, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
13ஐ தீயிட்டு கொழுத்தி பௌத்த தேரர்கள் போராட்டம்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தெரிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை கொழும்பில் பௌத்த பிக்குகளால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பௌத்த தேரர்களால் 13ஆவது திருத்தத்தின் பிரதியொன்றும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது.

கடந்த ஜனவரி 26ஆம் திகதி இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது ‘தனிப்பட்ட பிரேரணையூடாக 13ஐ நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும். ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. ‘ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அத்தோடு கடந்த 4ஆம் திகதி இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு அற்றிய விசேட உரையின் போதும் ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வு வழங்கப்படும் என்றும் , எனினும் நாடு பிளவுபட ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும்’ குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே பௌத்த பிக்குகளால் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டை பேரகும்பா பிரிவெனாவில் விசேட சங்க மாநாடொன்றும் இடம்பெற்றது. அங்கு ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் பாராளுமன்ற வீதியின் ஊடாக பொல்துவ சந்தியைச் சென்றடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு நுழைய முயற்சித்தனர். இதனை பொலிஸார் தடுக்க முற்பட்ட போது அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

அமைதியான போராட்டத்தில் ஈடுபடுவதாக பௌத்த பிக்குகள் அறிவித்திருந்த போதிலும் , குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு இடையூறு விளைக்கும் வகையில் அவர்களை அச்சுறுத்தல் அத்துமீறிச் செல்ல முற்பட்டமையின் காரணமாகவே அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதிகளில் நுழைவதற்கு கொழும்பு மேலதிக நீதவான் தடை விதித்திருந்ததன் பின்னணியிலேயே அவர் இவ்வாறு அத்துமீறிச் செல்ல முயற்சித்தனர். எவ்வாறிருப்பினும் இவர்களை பாராளுமன்ற சுற்று வட்டத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை.

இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் பொல்துவ சந்தியில் வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக குறித்த பகுதியின் ஊடாக போக்குவரத்துக்கள் ஓரிரு மணித்தியாலங்கள் முற்றாக முடங்கின. இதனால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கினர். அத்தோடு இதன் போது மஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி தம்மரத்ன தேரரினால் 13ஆவது அரசியலமைப்பின் பிரதியொன்று தீயிட்டு கொழுத்தப்பட்டது. ‘இனியொரு போதும் இதனை நடைமுறைப்படுத்த முடியாது.’ என்று கோஷமெழுப்பியவாறு அவர் அந்த பிரதியை எரித்தார்.

இதேவேளை பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பின் காமந்த துஷார என்ற நபர் ஆகியோர் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விடத்திலிருந்து செல்லுமாறு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்ட போதிலும் , அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமையினால் பின்னர் பொலிஸ் பொறுப்பிலெடுக்கப்பட்டனர்.

மேலும் 13ஆம் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற இராணுவத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜகிரிய – ஜயநேகராமயவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்திற்கு உரிமை கோரினார் கோட்டா

Next Post

ஆர்ப்பாட்ட நிலைமைகளைக் கட்டுப்படுத்த கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!

Next Post
ஆர்ப்பாட்ட நிலைமைகளைக் கட்டுப்படுத்த கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!

ஆர்ப்பாட்ட நிலைமைகளைக் கட்டுப்படுத்த கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures