குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட கைது செய்யப்பட்ட அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹம்மதை எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க ஆஜரானதையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் இடம்பெற்ற வெள்ளை வேன் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டே வைத்தியர் ரூமி மொஹமட் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.













