வீடியோ கேமினால் ஏற்பட்ட விபரீதம்?

வீடியோ கேமினால் ஏற்பட்ட விபரீதம்?

கனடா-Toronto-பிள்ளைகள் அதிக நேரம் வீடியோ கேமில் தங்கள் நேரத்தை செலவிடுவதை அனுமதிப்பதால் அதன் காரணமாக பல விபரீதங்கள் நேரிடலாம் என தெரிய வந்துள்ளதாக அறியப்படுகின்றது. ”Grand Theft Auto”, என்ற விளையாட்டை பார்த்து கொண்டிருந்த 11வயது பையன் பெற்றோரின் வாகனத்தை திருடி நெடுஞ்சாலை 400ல் மகிழ்ச்சி சவாரி செய்த சம்பவம் கடந்த இரவு நடந்துள்ளது.
ஞாயிற்றுகிழமை நடு இரவிற்கு சிறிது முன்னராக நெடுஞ்சாலை 400 வடக்கு பாதையில் Major Mackenzie டிரைவிற்கு அருகில் ஒழுங்கற்ற சாரதி ஒருவர் வாகனம் செலுத்தி கொண்டிருப்பதாக ஒன்ராறியோ மாகாண பொலிசாருக்கு தகவல் கிடைத்ததாக Sgt.Kerry Schmidt தெரிவித்தார்.
வாகனம் நெடுஞ்சாலை பூராகவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகள் இறுதியாக வாகனத்தை கிங் வீதிக்கருகில் பிடித்து விட்டனர். பொலிசார் தடுத்தும் நிறுத்த மறுத்து நெடுஞ்சாலை 400 தெற்கு பாதையில் செல்ல சுற்றி சுழன்று கொண்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் வேக எல்லைக்குள் சென்று கொண்டிருந்த வாகனம் எல்லையை மீறி 120ற்கும் மேலாக செல்ல தொடங்கியுள்ளது.
பல அதிகாரிகள் சம்பந்தப்படுத்தப்பட்டு விபத்து ஏற்படாத வகையில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
வாகனத்தை நிறுத்திய பின்னர் அவர்கள் அதிர்ச்சியடையும் வகையில் வாகனத்தின் சாரதியாக காணப்பட்டது 11வயது பையன் ஒருவன்.
இவன் வீட்டில் ; ‘Grand Theft Auto’ கேமை விளையாடிவிட்டு கார் ஒன்றை ஓட்டிப்பார்த்தால் எப்படி இருக்கும் என கண்டறிய முனைந்துள்ளான்.
இந்த முயற்சி கொடூரமானதாகவும் சோகம் நிறைந்ததாகவும் மாறியிருக்கலாம் என அதிகாரி தெரிவித்தார்.
பெற்றோரிடம் பையன் ஒப்படைக்கப்பட்டான். குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படவில்லை. ஆனால் இவன் 11வயது பையன். இவனிற்கு சரியான தண்டனை என்ன என்பதை பெற்றோர் நிச்சயிக்கட்டும் என அவர்களிடம் விடுகின்றோம் என அதிகாரி தெரிவித்தார்.

boys1

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News