Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுதலையானார் முன்னாள் புலிகள் இயக்க போராளி

March 7, 2020
in News, Politics, World
0
விடுதலையானார் முன்னாள் புலிகள் இயக்க போராளி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை யாழ். மேல் நீதிமன்றம் விடுவித்தது. இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை விடுவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டது.

முல்லைத்தீவு கோப்பாபிலவு முள்ளியவளையைச் சேர்ந்த காளிமுத்து மகேந்திரன் அல்லது தமிழ்ப்புலவன் என்ற முன்னாள் போராளியே குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

1999ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இலங்கைக் கடற்படையினரைத் தாக்கியளிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2014ம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கொழும்பு 4ஆம் மாடியில் வைத்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது.

2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் நலம்புரி முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி காளிமுத்து மகேந்திரன், இராணுவத்தினரின் நெளுக்குளம் மறுவாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டு 2 ஆண்டுகள் மறுவாழ்வளிக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், சில ஆண்டுகளில் பிணையில் விடுவிக்கப்பட்டார். சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டம் 2 (II) இன் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் உண்மை விளம்பல் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தியதுடன் எதிரி சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையாகியிருந்தார்.

உண்மை விளம்பல் விசாரணையின் நிறைவில் எதிரி காளிமுத்து மகேந்திரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நம்பகரமானது இல்லை என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், கடந்த ஜனவரி 24ஆம் திகதி கட்டளை வழங்கினார்.

அதனடிப்படையில் இந்த வழக்கை முன்கொண்டு செல்வது தொடர்பில் சட்ட மா அதிபரின் விளக்கத்துக்கு நேற்று மார்ச் 6ஆம் திகதிவரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன், எதிரிக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீதான விளக்கத்தை நிறுத்திக்கொள்வதாக மன்றுக்கு அறிவித்தார்.

அதனால் எதிரியை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளையிட்டது.

Previous Post

அம்பிகா சற்குணநாதன் பதவியிலிருந்து நேற்று விலகிக்கொண்டார்

Next Post

கொழும்பில் களமிறங்கும் கூட்டமைப்பு ஐ .தே .க வுக்கு ஆப்பாகும் – மகிந்த

Next Post
கொழும்பில் களமிறங்கும் கூட்டமைப்பு ஐ .தே .க வுக்கு ஆப்பாகும் – மகிந்த

கொழும்பில் களமிறங்கும் கூட்டமைப்பு ஐ .தே .க வுக்கு ஆப்பாகும் - மகிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தாயக – கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன்

யாழ். பலாலியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் – சிங்கள மயமாக்கும் தமிழர் நிலங்கள்: சிறீதரன் எம்.பி சீற்றம்

August 25, 2026
புதுமுக நடிகர் பிரபு ஏகாம்பரம் நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

புதுமுக நடிகர் பிரபு ஏகாம்பரம் நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 25, 2026
வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

August 24, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்

August 24, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures