Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

August 24, 2026
in News, Sports, முக்கிய செய்திகள்
0
வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

இலங்கை டென்னிஸ் சங்கம் ஏற்பாடு செய்யும் இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்கும் எட்டு நகர அணிகளில் ஒன்றான யாழ் ஃபிளமிங்கோஸ் தனது உத்தியோகபூர்வ அணி அறிமுக விழாவை நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சிட்டி ஹோட்டல் விருந்து மண்டபத்தில் நடத்தியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் டென்னிஸ் விளையாடும் அனைத்து பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டதுடன், விருந்தினராக அருட்தந்தை அ.பி.திருமகனும் சிறப்பு விருந்தினராக ஷங்கர் ஃபூட்ஸ் யுகே உரிமையாளர், மற்றும் யாழ்ப்பாணம் சிட்டி ஹோட்டல் தலைமை நிர்வாக அதிகாரி, சந்திரசேகரம் கேதீஸ்வரனும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 முதல் 30 வரை கொழும்பு 07, இலங்கை டென்னிஸ் சங்கத்தின் கடின தரை மைதானங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொழில்முறை லீக் போட்டி, இலங்கையில் டென்னிஸ் விளையாட்டை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வணிக வருவாயை மீண்டும் டென்னிஸ் கட்டமைப்பு மற்றும் இளம் வீரர் மேம்பாட்டிற்காக முதலீடு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

1904 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணம் இலங்கையின் முக்கிய டென்னிஸ் மையங்களில் ஒன்றாக விளங்கியது. தேசிய மட்டத்தில் பல சிறந்த வீரர்களை உருவாக்கிய யாழ்ப்பாணம், குறிப்பாக மறைந்த ழூபிராங்க் சபாரத்தினம்ழூ போன்ற புகழ்பெற்ற வீரர்களின் மூலம் நாட்டின் டென்னிஸ் வரலாற்றில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. எனினும், தற்போது பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய டென்னிஸ் மைதானங்களின் பற்றாக்குறையால், நிறப்பந்து நிலையைத் தாண்டி பல சிறுவர்கள் விளையாட்டை தொடர முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த நிலையை மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள யாழ் ஃபிளமிங்கோஸ், யாழ்ப்பாணத்தின் டென்னிஸ் பாரம்பரியத்தை மீட்டெடுத்து, இளம் வீரர்களுக்கு நிலையான வளர்ச்சி பாதையை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. 

டென்னிஸ் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரித்தல், சமூக டென்னிஸ் மைதானங்களை மேம்படுத்தல், சிறுவர்கள் தொடர்ச்சியாக பயிற்சி பெறும் வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களுக்கு வழிநடத்துதல் ஆகியவை அணியின் பிரதான நோக்கங்களாகும்.

அணி அறிமுக விழாவில், யாழ்ப்பாண மாணவர்களுக்கு டென்னிஸ் விளையாட்டின் எதிர்கால வாய்ப்புகள், இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்கில் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் மற்றும் யாழ் ஃபிளமிங்கோஸ் அணியின் நோக்கம், செயற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

நிகழ்வின் சிறப்பம்சமாக, யாழ் ஃபிளமிங்கோஸ் அணியின் முதல் உத்தியோகபூர்வ ஜெர்சி, அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனிடம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணியின் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் உத்தியோகபூர்வ அணிச் சீருடைகள் வழங்கப்பட்டன.

Previous Post

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

August 24, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்

August 24, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் அவதி: சஜித் பிரேமதாச

August 24, 2026
காணாமல்போன 31 பேரை இதுவரை கண்டறிந்துள்ளோம் – காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்

காணாமல்போன 31 பேரை இதுவரை கண்டறிந்துள்ளோம் – காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்

August 24, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures