Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது – இயக்குநர் வ. கௌதமன் கடும் கண்டனம்.

May 15, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இயக்குநர் கௌதமனின் ‘அத்துமீறினால் யுத்தம் ‘

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது

என இயக்குநர் வ கௌதமன் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசின் தடை நீட்டிப்பு என்பது நேர்மையற்ற அறமற்ற ஒரு செயலாகும்.  இந்தியாவுக்கு எதிராக இந்தியாவே விதித்துக் கொண்ட தடை  இது என்று இந்தியா உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. 

ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கி அது வன்முறை இயக்கமல்ல தமிழீழ தமிழ்க்குடி மக்களின் விடுதலைக்கான இயக்கம் என்று பிரகடனப்படுத்தியது. அப்படி இருக்க 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் திட்டமிட்ட தமிழின அழிப்பு நடந்து முடிந்து  கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவிலோ அல்லது உலகிலுள்ள எந்தவொரு நாட்டிலோ விடுதலைப்புலி அமைப்பினால் சிறியதொரு அசம்பாவிதம் கூட நடக்காத நிலையில் தமிழ் நாட்டின் மீது பழியினைப் போட்டு இந்திய ஒன்றிய அரசு  புலிகளின் மீதான தடையை மேலும் நீட்டித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தமிழர்களை ஒடுக்குவதிலும் இல்லாமல் ஒழிப்பதிலும் ஆகப் பெரும் வித்தியாசம் இல்லை என்பதையே இந்நிலைபாடு இன்னொருமுறை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. 

தமிழீழத் தமிழர்களும் விடுதலைப் புலிகளும் தங்களது தாய்நாடு தமிழீழம் என்றும் தந்தையர் நாடு இந்தியா என்றும் கூறி பெருமை கொண்டு வாழ்ந்தவர்கள். 2009ல் விடுதலைப் புலிகளின் அரசு இருந்தவரை தமிழ்நாட்டு மீனவ தமிழர்கள் ஒருவர் மீது கூட சிங்கள அதிகாரவர்க்கம் கை வைத்தது இல்லை. அதன் பிறகு எத்தனை எத்தனை  படுகொலைகள். விடுதலைப்புலிகள் அரசு இருந்தவரை இந்துமா கடல் பகுதியிலோ இலங்கைத்தீவிலோ அத்துமீறலோடு ஒரே ஒரு சீனர் கூட நடமாடியது இல்லை. ஆனால் இன்று கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். சிங்கள அதிகாரவர்க்கம் 99 ஆண்டுகள் ஒப்பந்தத்தோடு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு தாரை வார்த்திருக்கிறது. மிகச் சரியாகப் பார்த்தால் இந்தியா தடுத்திருக்க வேண்டும். புலிகள் இருந்திருந்தால் இன்னேரம் ஓட ஓடத் துரத்தி அடித்திருப்பார்கள். இந்துமா கடலுக்கும் இந்தியாவிற்கும் காலம் முழுக்க அரணாக நின்றவர்கள் விடுதலைப் புலிகள். 

சிங்களப் பகுதியில் மட்டுமல்ல தமிழீழப் பகுதியிலும் கச்சத்தீவிலும் சீனர்களின் அத்துமீறல்இ ஆக்கிரமிப்பு பெருகிக்கொண்டே வருகிறது. இந்திய அரசு இதையெல்லாம் எப்பொழுது உணர போகிறது. இந்தியா- சீன யுத்தம் நடந்தபோது இலங்கை சீனா பக்கம்தான் நின்றது என்கிற வரலாற்றை மிக இலகுவாக மறந்து விடப் போகிறதா இந்தியா. 

புலிகள் மீதான தடை நீட்டிப்பு மூலம் சீன அரசுக்கு இந்திய அரசு உதவி செய்திருக்கிறது என்பதுதான் யதார்த்தத்தின் பேருண்மை. இந்து மாக்கடலின் அதிகாரம் இந்தியாவிடம் இருக்கவேண்டுமானால் தமிழீழம் தமிழர்களிடமும் விடுதலைப் புலிகளிடமும் இருந்திருக்க வேண்டும். இல்லையேல் ஒருநாள் இந்துமாக்கடல் சீனாவிடம் இருக்கும். அப்போது இந்தியா யாருக்கு கீழ் இருக்கும் என்பது காலத்திற்கே வெளிச்சம்

Previous Post

தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நிலவரம்

Next Post

சசிகுமார் – சூரி கூட்டணியின் உருவான ‘கருடன்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post
சசிகுமார் – சூரி கூட்டணியின் உருவான ‘கருடன்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

சசிகுமார் - சூரி கூட்டணியின் உருவான 'கருடன்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

June 28, 2026
மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures