Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

மூன்று நாடுகளில் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 23ஆவது பீபா உலகக் கிண்ண கால்பந்தாட இறுதிச் சுற்றில் முதலாம் சுற்றுப் போட்டிகள் யாவும் நேற்றுடன் நிறைவுபெற்றன.

முதலாம் சுற்றின் கடைசிப் போட்டிகளில்   நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.

அதேவேளை,  கொலம்பியா – போர்த்துக்கல் போட்டியும் அல்ஜீரியா – ஆஸ்திரியா போட்டியும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.

இப் போட்டி முடிவுகளின் பிரகாரம் ஜே குழுவிலிருந்து ஆர்ஜன்டீனா, ஆஸ்திரியா, அல்ஜீரியா ஆகியனவும் கே குழுவிலிருந்து கொலம்பியா, போர்த்துக்கல், கொங்கோ ஆகியனவும் எல் குழுவிலிருந்து இங்கிலாந்து, குரோஷியா, கானா  ஆகியனவும்   32 அணிகள் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

மெஸ்ஸியின் கோல் குவிப்பு தொடர்கிறது

டலாஸ் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஜோர்தானுக்கு எதிரான ஜே குழு போட்டியில் மாற்று வீரராக 60ஆவது நிமிடத்தில் களம் புகுந்த லியோனல் மெஸ்ஸி 80ஆவது நிமிடத்தில் ப்றீ கிக் மூலம் அலாதியான கோல் போட, ஆர்ஜன்டீனா 3 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஜோர்தானுக்கு எதிரான கடைசிப் போட்டிக்கு முன்னரே ஆர்ஜன்டீனா 32 அணிகள் சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்ததால், பயிற்றுநர் லயனல் ஸ்கொலாரி  அணியில் 9 மாற்றங்களை செய்திருந்தார். மெஸ்ஸிக்கு சற்று ஓய்வு கொடுக்கும் வகையில் அவரை மாற்று வீரர்கள் பட்டியில் ஸ்கொலாரி இணைத்துக்கொண்டிருந்தார்.

போட்டியின் 19ஆவது நிமிடத்தில் லோ செல்சோ முதலாவது கோலை போட்டு ஆர்ஜன்டீனாவை முன்னிலையில் இட்டார்.

போட்டியின் 31ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனல்டியை லௌத்தாரோ மாட்டினெஸ் கோலாக்க இடைவேளையின்போது ஆர்ஜன்டீனா 2 – 0 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பினனர் ஜோர்தான் சாரபாக முஸா அல்தாமரி கோல் ஒன்றைப் போட்டு ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால், ஆர்ஜன்டீனாவின் பலத்துக்கு ஜோர்தானினால் ஈடுகொடுக்க முடியாமல் போக ஆர்ஜன்டீனா 3 – 1 என வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் ஒரு கோல் போட்ட மெஸ்ஸி, தனது உலகக் கிண்ண கோல் எண்ணிக்கையை 19ஆக உயர்த்திக்கொண்டுள்ளார்.

அல்ஜீரியா 3 – ஆஸ்திரியா 3

அல்ஜீரியாவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் கன்சாஸ் சிட்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற இதே குழுவுக்கான மற்றைய போட்டி 3 – 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இடைவேளையின்போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை போட்டிருந்தன.

ஆஸ்திரியா சார்பாக மரியோ அர்னோடோவிக் (28 நி.), மார்செல் சபிட்ஸர் (55 நி.), சசா கலாஜ்ஸிக் (90+6 நி.) ஆகியோரும் அல்ஜீரியா சார்பாக ரபிக் பெல்காலி (45 நி.), ரியாத் மாஹ்ரெஸ் (60 நி., 90+3 நி.) ஆகியோரும் கோல்களைப் போட்டனர்.

ரொனால்டோவின் போர்த்துகலுக்கு ஏமாற்றம்

கொலம்பியாவுக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில் நடைபெற்ற கே குழு போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு மொத்தமாக 36 முயற்சிகளை எடுத்துக்கொண்டன. ஆனால் ஒரு முயற்சியும் கோலாக மாறவில்லை.

மேலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கொலம்பிய வீரர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் அவரால் சாதிக்க முடியாமல் போனது.

இந்தப் போட்டி வெற்றிதோல்வின்றி முடிவடைந்த போதிலும் இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டன.

பின்னிலையிலிருந்து மீண்டுவந்து வெற்றியீட்டிய கொங்கோ

அட்லான்டா விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு கே குழு போட்டியில் உலகக் கிண்ண அறிமுக அணி உஸ்பெகிஸ்தானிடம் ஆரம்பத்தில் பெரும் சவாலை எதிர்கொண்ட கொங்கே, இடைவேளைக்குப் பின்னர் எதிர்நீச்சல் போட்டு 3 – 1 என வெற்றிபெற்றது.

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் எல்டோ ஷொமுரோதோவ் கோல் போட்டு உஸ்பெகிஸ்தானை முன்னிலையில் இட்டார்.

தொடர்ந்து 67ஆவது நிமிடம் வரை உஸ்பெகிஸ்தான் முன்னிலையில் இருந்தது.

ஆனால் அதன் பின்னர் எதிர்நீச்சல் போட்டு விளையாடிய கொங்கோ, 32 நிமிட இடைவெளியில் 3 கோலைகளைப் போட்டு வெற்றியீட்டியது.

யோவான் விஸ்ஸா (68 நி., 90 + 1 நி.), ஃபிஸ்டன் மேயேல் (78 நி.), ஆகியோர் கோல்களைப் போட்டு கொங்கோவை வெற்றி அடையச் செய்தனர்.

இடைவேளைக்குப் பின்னர் அசத்திய இங்கிலாந்து

பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் தனது இரண்டாவது அத்தியாத்தில் விளையாடும் பணாமா, நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் முன்னாள் சம்பியன் இங்கிலாந்துக்கு பலத்த சவாலாக விளங்கி தோல்வி அடைந்தது.

இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இந்தப் போட்டியின் முதலாவது பகுதியில் கோல் எதுவும் போடப்படவில்லை.

இடைவேளைக்குப் பின்னர் 60ஆவது நிமிடத்திலிருந்து சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்திய இங்கிலாந்து 5 நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களைப் போட்டு 2 – 0 என வெற்றியீட்டியது.

ஜூட் பெலிங்ஹாம் 62ஆவது நிமிடத்திலும் ஹெரி கேன் 67ஆவது நிமிடத்திலும் கோல்களைப் புகுத்தினர்.

இறுக்கமான போட்டியில் குரோஷியா வெற்றி

குரோஷியாவுக்கும் கானாவுக்கும் இடையில் பிலடெல்பியா விளையாட்டரங்கில் நடைபெற்ற  மற்றொரு கே குழு போட்டியில் குரோஷியா 2 – 1 என இறுக்கமான வெற்றியை ஈட்டியது.

ஆட்டத்தின் முதலாவது பகுதியில் பீட்டர சுசிக் 31ஆவது நிமிடத்தில் போட்ட கோலின் மூலம் குரோஷியா முன்னிலை அடைந்தது.

அதன் பின்னர் நெடு நேரத்திற்கு இரண்டு அணிகளாலும் கோல் போட முடியவில்லை.

கானா சார்பாக 73ஆவது நிமிடத்தில் டெரிக் லூக்காசென் கோல் நிலையை சமப்படுத்தினார்.

ஆனால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் நிக்கோலா விலாசிக் போட்ட கோல் குரோஷியாவின் வெற்றி கோலாக அமைந்தது.   

Previous Post

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

June 28, 2026
மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures