Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

வார்னர் வம்பிழுக்கலாம்… ப்ராட் முறைக்கலாம்..! ஆஷஸ் எனும் போர்

November 20, 2017
in Sports
0
வார்னர் வம்பிழுக்கலாம்… ப்ராட் முறைக்கலாம்..! ஆஷஸ் எனும் போர்

உலகில் ஏதேதோ காரணங்களுக்காக போர் உருவானதைப் பார்த்திருப்போம். 5 அங்குல கோப்பை, அதில் கொஞ்சம் சாம்பல் இதற்காக 135 வருடங்களாக ஒரு போர் தொடர்ந்து நடந்து வருகிறது என்றால் நம்புவீர்களா. ஆனால், அதுதான் உண்மை! ஆஷஸ் கிரிக்கெட் தொடர். இது போட்டி அல்ல, போர். கிரிக்கெட் போட்டிகளில் சில போட்டிகள் மட்டும்தான் போட்டியாக அல்லாமல் போராக இருக்கும். அப்படிப்பட்டவையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு முன்னோடி இந்த ஆஷஸ் போட்டிகள். களத்தில் வசைபாடுவது, மற்ற வீரர்களுடன் சண்டை, தோற்றால் கேப்டன் பதவி விலகுவது எனப் பல எமோஷனல் தருணங்களுக்கு பஞ்சமில்லாத தொடர் என்றால் அது ஆஷஸ்தான். 70-வது ஆஷஸ் தொடர் வரும் நவம்பர் 23-ம் தேதி தொடங்குகிறது. அதில் வெற்றி யாருக்கு எனக் கணிக்க முடியாத அளவுக்கு இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. 135 வருட ஆஷஸ் ஒரு பார்வை…

ஆஷஸ் வரலாறு:

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் 1882-ம் ஆண்டுக்குப் பிறகு ‘ஆஷஸ் தொடர்’ என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. 1882-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வென்றதில்லை. ஆனால் 1882-ல் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றது.

இத்தனைக்கும் அந்த ஒரு போட்டியில்தான் இங்கிலாந்து தோற்றிருந்தது. தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்துதான். ஆனாலும், ஓவல் தோல்வியை விமர்சித்து எழுதிய இங்கிலாந்து பத்திரிகையான ‘தி ஸ்போர்டிங் டைம்ஸ்’, ”இங்கிலாந்து கிரிக்கெட் இறந்துவிட்டது, இங்கிலாந்து கிரிக்கெட் எரிக்கப்பட்டு சாம்பல் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது” என இரங்கல் செய்தியாக அறிவித்தது.

பின்னர், 1882-83 சீசனில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டு டெஸ்ட்களின் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்க, மூன்றாவது டெஸ்ட்டை இங்கிலாந்து வென்று பழிதீர்த்தது. அதற்குப் பரிசாக மெல்போர்னைச் சேர்ந்த மூன்று பெண்கள், இங்கிலாந்து கேப்டன் இவோ ப்லிக்கிற்கு ஒரு கோப்பையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பெயில்ஸ்களை எரித்து சாம்பலாக வழங்கினார்கள் என்று கூறப்படுகிறது.

அதன்பின் 20 வருடங்கள் கழித்து ‘ஆஷஸ்’ என்ற பெயரில் அதிகாரபூர்வ தொடர் தொடங்கப்பட்டது. 1921-ல் லண்டனைச் சேர்ந்த பத்திரிகையில் ஆஷஸ் கோப்பையின் வடிவம் வெளியிடப்பட்டது. மரக்கோப்பைக்குள் சாம்பல் அடைக்கப்பட்டது போன்ற 5 அங்குல கோப்பையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தக் கோப்பையை எந்த அணி வென்றாலும் அந்த அணிக்கு ஆஷஸ் சாம்பியன் என்ற பெயர் இருக்கும்; ஆனால் கோப்பை எம்.சி.சி-யில் பாதுகாக்கப்படும். ஆனால், இது பிலிக்கிடம் இருந்த கோப்பையின் மாதிரிதான் என்றும் புதுமையாக வடிவமைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்தா, ஆஸ்திரேலியாவா?

இந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி நடைபெற்றுவருகிறது. இதுவரை 69 தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் மொத்தம் 325 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 130 போட்டிகளை ஆஸ்திரேலியாவும், 106 போட்டிகளை இங்கிலாந்தும் வென்றுள்ளன, 89 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.

இங்கிலாந்தில் இங்கிலாந்து அணி அதிகமான போட்டிகளையும், ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணி அதிகமான போட்டிகளையும் வென்றுள்ளது. 69 தொடர்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தலா 31 தொடர்களை வென்றுள்ளன. இந்தத் தொடர், முன்னிலையை நிர்ணயிக்கும் தொடராக இருக்கும்.

வார்னே, ஃபிளின்டாப், பீட்டர்சன், ஸ்ட்ராஸ், ரிக்கி பாண்டிங் போன்ற வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டவை மிகவும் பிரபலமாகும். 1989-க்குப் பிறகு தொடர்ந்து தோற்ற இங்கிலாந்து, 2005-ல் ஃப்ளின்டாப், பீட்டர்சன் எனப் பெரும்படையோடு, தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை ‘ரிட்டர்ன் ஆஃப் ஆஷஸ்’ ஆக்கியது. கடந்த தொடரை இழந்த ஆஸ்திரேலியா இந்த முறை வென்றே தீருவோம் என்று பழிதீர்க்கக் காத்திருக்கிறது. இந்த வருட ஆஷஸ் கணிப்புகளில் அதிபயங்கர வீரர்களாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் ப்ராடும் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெற்றி, தோல்வி, சதம், விக்கெட்கள், சாதனைகள் என்பதையெல்லாம் தாண்டி களத்தில் ஆக்ரோஷம், ஸ்லெட்ஜிங் எனப் பரபரப்பான டெஸ்ட் தொடராக இது இருக்கும். டெஸ்ட் போட்டிக்கான ஆர்வம் குறைந்துவிட்டது எனக் கூறுபவர்களுக்கு ஸ்லெட்ஜிங்காலும், சாதனைகளாலும் பதில் சொல்லும் ஆஷஸ் 2017.

Previous Post

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சியளித்த உசைன் போல்ட்!

Next Post

முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பறிபோனது!

Next Post
முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பறிபோனது!

முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பறிபோனது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures