Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாகன விபத்துக்களில் முதல் 7 மாதங்களில் 1,296 பேர் உயிரிழப்பு

August 3, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கெக்கிராவையில் விபத்து – மூவர் உயிரிழப்பு

வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துல்ஹிரிய பகுதியில் இன்று புதன்கிழமை (02) காலை பஸ் ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வருடத்தின் முதல் 7 மாத காலப்பகுதியில் வாகன விபத்துக்களால் 1,296 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துல்ஹிரிய பிரதேசத்தில் கொழும்பிலிருந்து அநூரதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர் திசையில் சீமெந்து ஏற்றி வந்த பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பஸ் வீதியில் குடைசாய்ந்துள்ளதுடன் விபத்தின் போது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

மேலும், 22 பேர் காயமடைந்த நிலையில் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைவாக இந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரையிலான  காலப்பகுதியில் 1,225 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது 1,296 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடங்களுடன்  ஒப்பிடும் போது இந்த வருடத்தில் வாகன விபத்துக்கள் சடுதியாக அதிகரித்துள்ளது.  

குறிப்பாக 2020 ஆம் ஆண்டு நாட்டில் 23,704 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றுள் 2,370 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 2021 ஆம் ஆண்டு 22,847 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அதில்  2,559 பேர்   உயிரிழந்துள்ளனர். இதேவேளை, கடந்த வருடம் 21,992 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 2,536 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வீதி விதிமுறைகளை பின்பற்றாமை, அதிக வேகம், மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்துதல், போதைப்பொருள்  பாவனை மற்றும் நித்திரையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விபத்துகள் சம்பவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous Post

விக்ரம் பிரபு நடிக்கும் ‘இறுகப் பற்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

யாழில் தாலிக்கொடி அறுத்த இந்திய பெண் உள்ளிட்ட நால்வரும் விளக்கமறியலில்

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

யாழில் தாலிக்கொடி அறுத்த இந்திய பெண் உள்ளிட்ட நால்வரும் விளக்கமறியலில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures