Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாண பல்கலைக்கழக 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு

December 7, 2017
in News
0

யாழ்ப்பாண பல்கலைக்கழக 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. அதன் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடாத்தப்படும் என்று யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

33 ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச் செய்தியாளர் சந்திப்பு நேற்று(6) புதன்கிழமை பல்கலைக்கழக சபை அறையில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய துணைவேந்தர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்முறை இரண்டு பகுதிகளாக நடாத்தப்படவுள்ளன. முதலாவது பகுதி எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 5 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப் படிப்புகள் பீடம், முகாமைத்துவ வணிக பீடம், கலைப்பீட சட்டத்துறை, விவசாய பீடம், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகு, சித்த மருத்துவத் துறை, வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம், வணிக கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 816 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
இவர்களில், உயர் பட்டப் படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த ஒருவர் கலாநிதி பட்டத்தையும், 64 பேர் பட்டப்பின் தகைமைகளையும், முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த 293 பேர் வியாபார நிருவாக மாணி பட்டத்தையும், 48 பேர் வணிகமாணி பட்டத்தையும், கலைப்பீட சட்டத்துறையைச் சேர்ந்த 63 பேர் சட்டமாணி பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 53 பேர் விவசாய விஞ்ஞானமாணி பட்டத்தையும், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகின் 58 பேர் மருத்துவ ஆய்வு கூடத் தொழில் நுட்பம், மருந்தாளர், தாதியம் ஆகிய துறைகளில் விஞ்ஞானமானி பட்டங்களையும், வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 84 பேர் பிரயோக விஞ்ஞான மாணி பட்டத்தையும், 110 வணிக கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 110 பேர் வணிகமாணி பட்டத்தையும் 10 பேர் நேரடியாகப் பிரசன்னமாகாத நிலையிலும் பட்டங்களைப் பெறவுள்ளனர் என்றும்,

எதிர்வரும் 2018, மார்ச் மாதம் நடைபெறவுள்ள 33 ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதியில் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம், மருத்துவ பீடம், கலைப்பீடம், மற்றும் உயர்பட்டப் படிப்புகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், வெளிவாரியாகப் பட்டம் பெறுபவர்களின் பட்டங்களும் உறுதிப்படுத்தப்படவுள்ளன என்று துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.

ஐந்து அமர்வுகளில் முதலாம் அமர்வு காலை 9 மணிக்கும், இரண்டாவது அமர்வு காலை 10.45 க்கும், மூன்றாவது அமர்வு மதியம் 1.15 க்கும், நான்காவது அமர்வு பி.ப 3 மணிக்கும், ஐந்தாவது அமர்வு 4.30 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளன.

Previous Post

மகளை பாலியல் வன்புணர்ந்த தந்தைக்கு 18 வருட கடூழிய சிறை

Next Post

மத்திய வங்கி மோசடிக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும்!

Next Post
மத்திய வங்கி மோசடிக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும்!

மத்திய வங்கி மோசடிக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures