Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் ஒருவருடத்திற்கு தேர்தலைக் காலம் தாழ்த்த சதி

March 6, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
2000 ரூபா எவ்வளவு காலத்திற்கான கொடுப்பனவு? அரசாங்கத்திடம் கேள்வி

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதன் மூலம் சூழ்ச்சி செய்து மீண்டும் ஒரு வருடத்திற்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த திட்டமாகும். 

எனவே தேர்தல் ஆணைக்குழு அதற்கு இடமளிக்காமல் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல் , நீதிமன்றத்தை நாடி சட்ட ரீதியான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளோம்.

ஆனால் அரசாங்கத்தை எதிர்ப்பதாகக் கூறும் வேறு சிலர் தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு கூட எதிர்ப்பினை வெளியிடவில்லை.

தேர்தலுக்காக வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது. எனவே பிரிதொரு சூழ்ச்சியின் மூலம் தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆயத்தமாககிக் கொண்டிருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலையில் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ள போதிலும் , தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்ததைப் போன்று கடந்த வெள்ளிக்கிழமை தேர்தலுக்கான தினத்தை அறிவிக்காமையானது எம்மை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. எனவே தேர்தல் ஆணைக்குழு இனியும் தாமதிக்காது இன்றைய தினம் தினத்தை அறிவிக்க வேண்டும்.

தொடர்ந்தும் கலந்துரையாடிக் கொண்டிருப்பதற்கு எதுவும் இல்லை. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கமைய பொலிஸ் திணைக்களத்திற்கும் , நிதி அமைச்சிற்கும் , அரச அச்சகத்திற்கும் பணிப்புரையை மாத்திரமே விடுக்க வேண்டியுள்ளது. எனவே அதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு விரைந்து எடுக்க வேண்டும்.

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை மேலும் ஒரு வருட காலத்திற்கு காலம் தாழ்த்துவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த திட்டமாகும். அவருக்கு வாக்கு வங்கி குறைவடைந்துள்ளமைக்கு எம்மால் என்ன செய்ய முடியும்? இவ்வாறு ஏதேனும் சூழ்ச்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் நாம் மீண்டும் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம் என்றார்.

Previous Post

காஜல் அகர்வால் நடிக்கும் ‘கோஸ்ட்டி’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post

எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் குறைவடையலாம்

Next Post
எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்!

எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் குறைவடையலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures