மார்க்கம் நகரில் வசிப்பவரா நீங்கள்? உங்கள் வீட்டின் கதவைப் கனடியப் பிரதமர் நாளை தட்டலாம்!

மார்க்கம் தோன்கில் தொகுதிக்கு கடந்த வியாளக்கிழமை விஜயம் செய்த கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அவர்கள் மீண்டும் அந்தத் தொகுதிக்கான விஜயத்தை வியாளக்கிழமை வருகை தரவுள்ளார்.

மாலை 6 மணியிலிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாக அறியப்படும் இந்தப் பிரச்சாரத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளும் பிரச்சார வலயத்திற்குள் வருவதாகவே அறியப்படுகின்றது.

கனடியப் பிரதமருடன் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரியும் தமிழ் ஆதரவாளர்கள் பலரும் இணைந்து கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

எனவே நீங்கள் இந்தத் தொகுதியில் வசித்தால் எதற்கும் செல்பி எடுப்பதற்குத் தயாரான நிலையில் இருந்தால் செல்பிப் புகழ் பிரதமருடன் புகைப்படமெடுக்கும் வாய்ப்புண்டு.

இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பதை அண்மைய கருத்துக் கணிப்பும், முற்கூட்டிய வாக்குப் பதிவில் கலந்து கொண்டவர்களின் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டும் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது.

எனவே வாக்குவீதத்தில் பாரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்தத் தொகுதி லிபரல் கட்சியின் கோட்டையே என்பதையும் “எதிரிக்குச் சகுணம் பிழைக்க வேண்டும் என்பதற்காக தங்களின் மூக்கையே அறுத்துக் கொள்ளும்” ஒரு சில தமிழ் அமைப்புக்களிற்கு கற்பிதமாகவும் இந்த நிகழ்வு மையப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தை ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

லிபரல் கட்சி வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வதற்கான ஏற்பாட்டின் பிரகாரம் கனடிய தமிழ்ப் பிரமுகர்களில் முக்கியமானவர்கள் கூட இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்களையுடையதாகவும் இந்தப் பிரச்சாரம் அமைந்துள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழர்களிற்கும்; லிபரல் கட்சிக்கும் இடையேயான உறவின் அழுத்தத்தைப் பிரதிபலிக்குமுகமான நிகழ்வுகளும் இடம்பெறலாம் என்ற ஹேஸ்யங்களை ஊடகங்கள் சார்ந்தோர் பெற்ற அழைப்புக்களின் மூலம் அறியப் படுகின்றது.

தை மாதத்தை கனடா முழுவதும் மரபுரிமை மாதமாக தனது அரசு செயற்படுத்தியதையும், தனது தைப பொங்கல் வாழ்த்துச் செய்தியை பல மில்லியன் மக்கள் பார்த்தைதையும், தமிழர்கள் தன்பால் வைத்துள்ள பற்றையும் முதன்மையாக பிரதமர் கருதுவதாகவும், இது அவருக்கு மேன்மையான ஊக்கத்தைக் கொடுத்துள்ளதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News