Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மறுமலர்ச்சிக்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை இலக்கு | பிரதமர் ஹரிணி

January 4, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு !

எமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயதானமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றது.

மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும்.

இதனால் கல்வித் துறையில் பாரிய பரிணாமத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மாகாணக் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று வியாழக்கிழமை (02) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

இவ்வாறானதொரு பரிணாமம் இடம்பெறும்போது கட்டாயம் நாம் ஒன்றிணைந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையெனில் இங்கு நெருக்கடி ஏற்படுவதற்கு இடமுள்ளது. கல்வி என்பது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு தலைப்பாகும்.

பொதுப் பரீட்சை முறையின் கீழ் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் பொதுவான கல்வி முறைமையொன்று காணப்படுதல் வேண்டும்.

மாகாணங்களுக்கிடையில் பல்வேறு தேவைகள் காணப்பட்ட போதிலும் கொள்கைகளுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் இருக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

எனினும் கொள்கை மட்டத்தில் தீர்மானங்களை எடுக்கும்போது தேசிய மட்டத்திலான கொள்கைகளுக்கமைய பணியாற்ற வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்படுகிறது.

பிள்ளைகளின் கல்வித் தேவைகள் போசாக்கு வேலைத்திட்டங்கள் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறை தொழிற்துறை மட்டத்திலான ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டங்களின் தேவை போன்ற துறைகளில் மாகாண மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவௌ உள்ளிட்ட அதிகாரிகளும், மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

Previous Post

தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்புடைய தீர்வை வழங்காதவரை தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை நம்பப்போவதில்லை | சி.வி.விக்னேஸ்வரன்

Next Post

நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவரா நீங்கள்

Next Post
நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவரா நீங்கள்

நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவரா நீங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures