மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த பொலிசார் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதோடு வீதியால் பயணித்த பெண் ஆசிரியர் ஒருவரையும் மோதித்தள்ளினர். இதன்போது வீழ்ந்த இரு பொலிசாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் இருவரும் போதையின் உச்சத்தில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுடன் வாய்த் தர்க்கத்மில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கு பணிபுரியும் சிங்களமொழி தாதியர்கள் உதவ முற்பட்டபோதும் அவர்களையும் தகாத வார்த்தைப் பிரயோகத்தால் ஏசியதனால் குறித்த தாதிய்ர்களும் ஒதுங்கிகொண்டனர். இந்த நிலையில் இருவரும் தொடர்ந்தும் மதுபோதையில் வைத்தியசாலை விடுதியிலும் குழப்பம் விளைவித்த நிலையில் சட்ட நடவடுக்கை எடுக்குமாறு வைத்மியர்கள் பரிந்துரைத்ததோடு வைத்தியசாலைப் பணிப்பாளரிற்கும் முறையிட்டுள்ளனர்.
குறித்த சம்பம் தொடர்பில் கருணாரட்ன , மெண்டிஸ் ஆகிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களான பலாலி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர்களிற்கு எதிராகவே இவ்வாறு முறையிடப்பட்டுள்ளது. இருப்பினும் இரு பொலிசார் மீதும் நடவடிக்கை எடுப்பின் பணிக்கு இடையூறு ஏற்படும் என கருதி விடுவிப்பதற்கும் முயற்சிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

