Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போர் மேகம் சூழ்ந்த போதும் இந்திய வாலிபரை காதல் திருமணம் செய்த உக்ரைன் இளம்பெண்

March 3, 2022
in News, World
0
போர் மேகம் சூழ்ந்த போதும் இந்திய வாலிபரை காதல் திருமணம் செய்த உக்ரைன் இளம்பெண்
போர்முனையில் காதல் திருமணம் செய்த ஜோடி அங்கிருந்து அவசரமாக இந்தியா வந்தடைந்த நிலையில் இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. உக்ரைன் மீது ரஷியா ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24-ந் தேதி தொடங்கிய தாக்குதல் இன்று வரை நீடிக்கிறது. போருக்கான முன்னேற்பாடுகளை ரஷியா தொடங்கியதும், உக்ரைனை உலக நாடுகள் எச்சரித்தன. எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்று கூறப்பட்ட நிலையில் உக்ரைனில் தங்கி இருந்த இந்தியர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்புமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து பணி நிமித்தமும், படிப்புக்காகவும் உக்ரைன் சென்றவர்கள் உடனடியாக இந்தியா திரும்பும் பணியில் ஈடுபட்டனர். ஐதராபாத்தை சேர்ந்த பிரதீக் என்ற வாலிபர் உக்ரைனில் தங்கி பணிபுரிந்து வந்தார். அங்கிருந்த போது அவருக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம்பெண் லியுபோவ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நேரத்தில்தான் உக்ரைன் போர் தொடங்கியது. இதை அறிந்ததும் அவர்கள் இருவரும் கடந்த 23-ந் தேதியே உக்ரைனில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு அவர்கள் இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வாலிபர் பிரதீக்கும் இந்தியாவில் உள்ள பெற்றோருக்கு தகவல் கூறினார். அவர்கள் உடனே இருவரையும் இந்தியா வந்துவிடும்படி அறிவுறுத்தினர். அதன்படி போர்முனையில் காதல் திருமணம் செய்த ஜோடி அங்கிருந்து அவசரமாக இந்தியா வந்தனர். ஐதராபாத் வந்தடைந்த இருவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமண தம்பதியினர்
திருமண வரவேற்பில் பிரதீக்கின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதுபற்றி மணமக்கள் கூறம்போது, உக்ரைனில் நாங்கள் இருவரும் சந்தித்து கொண்டதுமே எங்களுக்குள் காதல் பூ பூத்துவிட்டது. 3 மாதங்களில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டோம். ஆனால் போர் மூண்டுவிட்டதால் அங்கேயே அவசரமாக திருமணம் செய்து கொண்டோம். பின்னர் இந்தியா வந்துவிட்டோம். இங்கு உறவினர்கள் எங்களின் திருமண வரவேற்பை நடத்தினர்.அதோடு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர சிறப்பு பூஜைகளும் நடத்துகிறார்கள், என்றனர்.
#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]
Previous Post

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!

Next Post

மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா

Next Post
மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா

மீண்டும் இணையும் சூர்யா - ஜோதிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures