Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஏம்பல் குளத்து நீரால் மூடப்படும், தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதியின் தாழ்வாக உள்ள பகுதியை சீரமைக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக  வலியுறுத்தி வந்த நிலையில், அப்பகுதியை நீர் ஓடும் கட்டுமானங்களுடனான (பெட்டி மதகுகள்) உயர்த்தப்பட்ட பாதையாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில், 2 கோடியே 1 இலட்சத்து 69ஆயிரத்து 640 ரூபாய் என்னும் ஒப்பந்தத் தொகையில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.     

இந்நிலையில் இந்த வீதி சீரமைப்புப் பணிகளை ரவிகரன் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதியானது மழைக் காலங்களில் ஏம்பல் குளத்து நீரால் மூழ்குவதால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த 2025.12.05ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பெரிய இத்திமடு கமக்கார அமைப்பினர் கோரிக்கைக் கடிதமொன்றை வழங்கியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பெரிய இத்திமடு கமக்கார அமைப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2025.12.07 அன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் நீரால் மூழ்கும் குறித்த பகுதியைப் பார்வையிட்டதுடன், அந்த வீதியைப் பயன்படுத்தும் மக்களின் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2025.12.22ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில்  இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் ஆராயும்  விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த பாதையால் மக்கள் பயணம் செய்ய இயலாத நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால்  எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன், மக்களின் குறித்த போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குரிய ஒதுக்கீடு 2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் என குறித்த கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2026.02.23ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்படி பாதைக்கான மறுசீரமைப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளருடன் உரையாடியபோது குறித்த வீதியின் சீரமைப்புக்குரிய ஒதுக்கீடு இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இது தொடர்பில் மீண்டும் கடந்த 2026.04.03ஆம் திகதியன்று வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளரிடம் ரவிகரன் வினவியபோது, நாட்டில் நிலவும் சமகால நெருக்கடி நிலையால் மேற்குறித்த பணி சற்று தாமதமடைவதாகவும் எனினும் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் மாதத்திற்கு முன்னர் குறித்த வீதிச் சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரவிகரனின் தொடர்ச்சியான வலியுறுத்தலுக்கமைய தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் பாதையின் தாழ்வுப் பகுதி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் இந்த கள விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுடன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.கிரிதரன், சமூக செயற்பாட்டாளர் கு.கஜீவன் ஆகியோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

Next Post

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

Next Post
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீடு

November 8, 2026
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் – மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்சார கட்டண அதிகரிப்பை நாங்கள் கோரவில்லை | தேசிய அமைப்புக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தலைவர்

November 8, 2026
ஈஸி24நியூஸ் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்!

ஈஸி24நியூஸ் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்!

November 8, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அடுத்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அராங்கம் ஆயத்தம்!

November 8, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures