Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலியாக வடக்கு முதல்வர் – மஹிந்தவை காப்பாற்ற மைத்திரி – அடுத்த அதிர்ச்சி என்ன?

October 16, 2016
in News, Politics
0
புலியாக வடக்கு முதல்வர் – மஹிந்தவை காப்பாற்ற மைத்திரி – அடுத்த அதிர்ச்சி என்ன?

புலியாக வடக்கு முதல்வர் – மஹிந்தவை காப்பாற்ற மைத்திரி – அடுத்த அதிர்ச்சி என்ன?

அண்மையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ஆற்றிய உரையினைத் தொடர்ந்து தென்னிலங்கையில் பல்வேறுபட்ட கருத்துகள்முன்வைக்கப்பட்டன.

தெளிவாக நோக்கும் போது அவர் கூறிய உரையில் முன்னாள் பாதுகாப்பு செயளாளருக்கு ஆதரவான கருத்துகளை முன்வைக்கவில்லை.

ஆனாலும் இவை அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்தவும் நல்லாட்சியில் உட்பூசலை உண்டு பண்ணவும் திட்டமிட்டு ஜனாதிபதியின் கருத்துமாற்றப்பட்டு அதி வேகமாக பரப்பட்டு விட்டது என்பதே உண்மை என தென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி தன் உரையின் போது,

“முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கடற்படை அதிகாரிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றிருந்தார்கள் இது தொடர்பில் நான் அதிருப்தி தெரிவிக்கின்றேன்.

குறிப்பாக யுத்தம் செய்த கடற்படை அதிகாரிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றமை தொடர்பில் நான் அதிருப்தி தெரிவித்துக் கொள்கின்றேன்”. என்றே தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த வார்த்தைகள் ராஜபக்சர்களுக்கு ஆதரவு கருத்தாக மாற்றப்பட்டது என்பது தற்போது தெளிவாகின்றது.

அதன் பின்னர் அவருடைய உரையினை கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு கருத்தாக திரிபுபடுத்தப்பட்டு கூறப்பட்டு வருகின்றது.

இதேவேளை இதற்கு முன்னர் வடக்கு முதல்வரின் உரையையும் மாற்றி அவர்விடுதலைப்புலிகளை மீண்டும் கொண்டு வர முயன்று வருகின்றார் எனக் கூறி தென்னிலங்கை கொதித்துப்போனது.

அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் பல்வேறு வகையான போராட்டங்கள் இடம்பெற்றது ஆனாலும் நல்லாட்சியின் பாரா முகத்தால் அது எட்டாக்கனியாகிப்போய் விட்டது.

தற்போது ஜனாதிபதியின் உரையினையும் நல்லாட்சிக்கு எதிராக மாற்றப்பட்டு பல்வேறு பட்ட சர்ச்சையினை ஏற்படுத்த முயற்சி நடந்து வருகின்றது.

மைத்திரியையும் மஹிந்தவையும் இணைத்து விட்டால், அல்லது ரணில் மைத்திரிக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தி விட்டால் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவது மிக எளிதான விடயமே.

இவை அனைத்திற்கும் பின்னணியில் இருந்து செயற்படுபவர்கள் யார் என்பது தெளிவாக தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றது எனவும் அவதானிகள் கூறுகின்றனர்.

இதேவேளை தனது கட்சியின் நிலைப்பாட்டை நிறுத்திக்கொள்ள மஹிந்த தரப்பினருடன் அணைந்து கொள்ள மைத்திரி இரகசியமாக செயற்பட்டு வருகின்றாரா? என்ற வகையிலும்சிந்திக்கத்தோன்றுகின்றது.

காரணம் புதுக்கட்சி மாயை சித்தரிக்கப்பட்டு அதனூடாக சுதந்திரக்கட்சியே வலுப்படுத்தப்பட்டு வருவது தற்போது அவதானிக்கப்படத்தக்கதே.

தற்போது மைத்திரியின் கருத்தும் அடங்கிப்போய் விட்டது. இதன்போது அடுத்த திட்டம்விடுதலைப்புலிகள் மீண்டும் வருகின்றார்கள் என்ற பயத்தை ஏற்படுத்துவதே ஆகும். ஏற்கனவே விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள், மீண்டும் வருவார்கள் எனக்கூறப்பட்டு வருகின்றது.

அதற்கான ஆயத்தமாக அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் சர்வதேச நாடுகளில் பதுங்கி உள்ளார்கள் என்ற கருத்துடன் சேர்த்து தொடர்ந்தும் பல்வேறு வகையாக கருத்துகள் விடுதலைப்புலிகள் தொடர்பில் எழுப்பப்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்தும் ஆட்சியை மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் தோல்வி அடைந்துவருமானால் அடுத்து விடுதலைப்புலிகளை மீண்டும் கொண்ட வர அல்லது பிரபாகரன் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட வில்லை என்பதனையும் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த தயங்க மாட்டார்கள் எனவும் தென்னிலங்கை புத்தி ஜுவிகள் தெரிவித்து வருகின்றனர்.

Tags: Featured
Previous Post

யாழில் புலிகள் தலைவரை அண்மையில் கொண்டு வந்ததன் காரணம்?

Next Post

தலை ஒட்டி பிறந்த இரட்டை பையன்களை வெற்றிகரமாக பிரித்த டாக்டர்கள்.

Next Post
தலை ஒட்டி பிறந்த இரட்டை பையன்களை வெற்றிகரமாக பிரித்த டாக்டர்கள்.

தலை ஒட்டி பிறந்த இரட்டை பையன்களை வெற்றிகரமாக பிரித்த டாக்டர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கப்போவதில்லை : யாழில் உறுதியளித்த பிரதமர்

August 24, 2026
நடிகை நயன்தாரா மொட்டை அடித்ததாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை நயன்தாரா மொட்டை அடித்ததாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

August 24, 2026
இரண்டாவது டெஸ்டில் முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்தியா 187 – 3 விக்.

இரண்டாவது டெஸ்டில் முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்தியா 187 – 3 விக்.

August 23, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

நாடாளவிய ரீதியில் குற்றம், போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையில் 607 பேர் கைது

August 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures