Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடித்தே ஆக வேண்டும் – விஜித்த ஹேரத்

April 8, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அதிகாரப் பேராசையில் ஜனாதிபதி – ஜே.வி.பி.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக மக்களின் ஜனநாயக உரிமை மீறப்படுவதுடன் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் மக்களை கடும் அடக்குமுறைக்கு தள்ளிவிடுவதற்கு ஜனாதிபதிக்கு இதன் மூலம் முடியுமாகிறது.

அதனால் இந்த சட்டமூலத்தை தோற்கடித்தே ஆகவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பொதுவாக அனைவருக்கும் பாதிப்பாக அமைகிறது. அரசாங்கத்துக்கு ஒன்றை செய்யுமாறு தெரிவித்தாலும் அல்லது செய்ய வேண்டாம் என தெரிவித்தாலும் அது பயங்கரவாத செயலாகவே பார்க்கப்படும்.

உதாரணமாக விவசாயிகள் உரம் கேட்டு போராடினால் அதற்கு எதிராக செயற்பட முடியும். வரி குறைக்குமாறு போராடினால் அதற்கு எதிராக செயற்பட முடியும். தொழிற்சங்க உறுப்பினர்களுக்கோ அல்லது மக்கள் கூட்டமொன்றுக்கு ஒன்றாக கூட முடியாது.

அத்துடன் கடந்த காலங்களில் காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இதன் பின்னர் முன்னெடுக்க முடியாது. அதேபோன்று ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் கடும் அழுத்தங்கள் இருக்கின்றன.

முகப்புத்தகம். டுவிட்டர். போன்ற சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்துக்கு விராேதமான கருத்துக்களை தெரிவிக்க முடியாமல் போன்றன. இராணுவத்தினருக்கு நபர்களை கைதுசெய்ய முடியுமாகிறது.

மேலும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டை முறையாக தாக்கல் செய்யாமல் 3மாதங்களுக்கு அவரை தடுத்துவைக்க முடியும்.

இந்த குற்றச்சாட்டை அதன் பின்னரும் முறையாக தாக்கல் செய்ய முடியாமல் போனால் நீதிமன்றம் ஊடாக மேலும் 3மாதங்களுக்கு நீடித்துக்கொள்ள முடியும். 

அத்துடன் அத்தியாவசிய சேவைகளுக்கு தடை ஏற்படும் வகையில் கருத்துக்களை தெரிவிக்க முடியாது. உதாரணமாக, தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் அது தொடர்பில் ஊடகவியலாளருக்கு எழுத முடியாது.

அரசியல்வாதிகளுக்கும் வெளியில் கருத்து தெரிவிக்க முடியாது. இதன் ஊடாக மக்களை கடும் அடக்குமுறைக்கு தள்ளி விடுவதற்கு ஜனாதிபதிக்கு முடியுமாகிறது.

அதனால் இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்ட பின்னர், சாப்பிடுவதற்கும் அரசாங்கத்தின் புகழ் பாடுவதற்கும் மாத்திரமே மக்களுக்கு வாய் திறக்க முடியுமாகிறது.

அதனால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விரோதமாகவே அமைந்துள்ளது. எனவே இந்த சட்டமூலத்தை நிச்சியமாக தோற்கடித்தே ஆகவேண்டும் என்றார்.

Previous Post

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் பேராசிரியர்கள் | கல்வி அமைச்சு

Next Post

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும்

Next Post
இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

July 1, 2026
நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures