பிறந்த குழந்தைக்கு பிரதமர் பெயரை சூட்டிய கனடா புகழிடம் பெற்றோர்

கனடா நாட்டில் புகலிடம் பெற்றுள்ள பெற்றோர் இருவர் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு அந்நாட்டின் பிரதமரின் பெயரை சூட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்திற்கு அஞ்சி ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோரி வருகின்றனர்.

சிரியா அகதிகளுக்கு புகலிடம் வழங்கப்படும் என கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்ததை தொடர்ந்து 2016-ம் ஆண்டு முதல் இதற்கான பணிகள் நடைபெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில், சிரியாவை சேர்ந்த Afraa மற்றும் Moe Bilal என்ற தம்பதி கனடாவில் குடியேறியுள்ளனர்.

பெண் கர்ப்பமாக இருந்ததால் கடந்த வியாழக்கிழமை அன்று பெண்ணிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

புகலிடம் கோரி வந்த சிரியா மக்களை அன்புடன் அரவணைத்து புகலிடம் வழங்கியுள்ள பிரதமரை கெளரப்படுத்த வேண்டும் என எண்ணிய பெற்றோர் இருவரும் தங்களுடைய குழந்தைக்கு பிரதமரின் பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர்.

இதனை தொடந்து குழந்தைக்கு Justin-Trudeau Adam Bilal என்ற பெயரை சூட்டியுள்ளனர்.

சிரியா நாட்டின் வழக்கப்படி பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தாத்தா அல்லது பாட்டியின் பெயரை சூட்டுவது மரபாகும்.

ஆனால், கனடாவில் தங்களுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ள பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குழந்தைக்கு பிரதமரின் பெயரை சூட்டியுள்ளதாக பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் தற்போது புகலிடம் பெற்றுள்ள இரண்டு குழந்தைகளுக்கு அந்நாட்டு பிரதமரின் பெயரை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News