வன்கூவர்–செவ்வாய்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற தேர்தல் ஒரு சிறுபான்மை அரசாங்கம் அமைய வழிவகுத்துள்ளது. 65-வருடங்களில் முதல் முறையாக அமையும் இந்த சிறுபான்மை அரசாங்கம் மிகவும் வித்தியாசமான ஒன்றாக அமையும் என கிறிஸ்டி கிளார்க் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என வாக்காளர்கள் விரும்புகின்றனர் என்பதை இத்தேர்தல் முடிவுகள் மூலம் தெரிவித்துள்ளனர் என லிபரல் தலைவர் தெரிவித்துள்ளார்.
51-வயதுடைய கிளார்க் தனது ஆதரவாளர்கள் மத்தியில் புதன்கிழமை பேசுகையில் தான் தொடர்ந்தும் முதல்வராக இருப்பார் என தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை அரசாங்கம் ஒன்றை அமைக்க 44-இருக்கைகள் தேவை. ஆனால் லிபரல் தேர்தலில் 43-இருக்கைகளை பெற்றுள்ளது.
87-தொகுதிகளில் லிபரல் 4-3தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. என்டிபி 41. மாகாணத்தின் வரலாற்றில் முதல் தடவையாக கிரீன்ஸ் தங்கள் ஒரு தொகுதி என்ற கணிப்பில் இருந்து மூன்றாக விரிவடைந்துள்ளது.
கிளார்க் கிரீன் தலைவர் அன்ட்றூ வீவருடன் கதைத்துள்ளதாகவும் இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயற்பட உடன்பட்டிருப்பதாகவும் கட்சி அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இத்தேர்தல் மூலம் கிளார்க் இரண்டாவது தடவையாக முதல்வர் ஆகின்றார். 2011ல் லிபரல் தலைவராக தெரிவு செய்யப்பட்டவர் கிளார்க்.
1996ல் முதல் முதலாக சட்டமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு 2001ல் லிபரலின் மாபெரும் வெற்றியின் போது துணை முதல்வராகவும் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார்.

B