Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்கிறது இலங்கை | ஜீ.எல். பீரிஸ் எச்சரிக்கை

November 9, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்கிறது இலங்கை | ஜீ.எல். பீரிஸ் எச்சரிக்கை

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்லும் இத்தகைய சூழ்நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக இந்தப்  பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் என நாம் எதிர்பார்க்கிறோம் என பேராசிரியர் ஜீ எல். பீரிஸ் தெரிவித்தார்.

மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவில் அரசியல் அலுவலகத்தில் இன்று (09) திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தியடைவதைவிட  சுருங்கிக்கொண்டு செல்கிறது. 2025 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டில் இருந்த 5.8வீத வளர்ச்சி, 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டாகும்போது 4.2 வீதமாகக் குறைந்துள்ளதுடன், 2008 ஆம் ஆண்டில் இருந்த பொருளாதார அளவை விட இன்று 2வீதம் குறைந்துள்ளதையும் காட்டுகிறது.

மேலும், மாதந்தோறும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்களின் சேமிக்கும் திறனும் பணத்தின் மதிப்பும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் 6.3வீதமாக இருந்த பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 8வீதமாகவும், உணவுப் பணவீக்கம் 8.5வீதமாகவும் உயர்ந்துள்ளது. பணவீக்கத்தின் தீவிரத்தன்மை காரணமாக, 9 ஆண்டுகள் செல்லும்போது மக்களின் சொத்துக்களில் 50 வீதம் குறையக்கூடும்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது 2024 ஒக்டோபரில் 293ரூபாவாக இருந்த ஒரு டாெலரின் மதிப்பு இன்று 337ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், இது சுமார் 45ரூபா  இன் வீழ்ச்சியாகும். இதனால் எரிபொருள், பருப்பு, வெங்காயம், சீனி, மா போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது ஒவ்வொரு டாெலருக்கும் கூடுதலாக  45ரூபா செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன், நாட்டின் வெளிநாட்டுக் கடனைக் கணக்கிடுவதிலும் இந்த அதிகரிப்பு கடுமையாகப் பாதிக்கிறது.

அரசு சேவைகள்

பொருளாதாரத்தின் சுருக்க நிலை, பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது தடைப்பட்டுள்ளதுடன் இருக்கும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதும் கடினமாகியுள்ளது. படித்த இளம் தலைமுறையினர் மத்தியில் வேலையின்மை 43வீதமாக உயர்ந்துள்ளது.

இது ஆசியாவிலேயே மிகக் கூடிய இளையோர் வேலையின்மை விகிதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் 50 இலட்சம் பேர் உள்ளனர். வேலையற்ற பட்டதாரிகளில் 50வீதம் பேர் நாட்டை விட்டு வெளியேற விரும்பினாலும், மேற்கு நாடுகளின் குடியேற்றக் கட்டுப்பாடுகள் காரணமாக அதுவும் தற்போது முடங்கிப் போயுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டிற்கு பெரியளவிலான வெளிநாட்டு முதலீடுகள் எவையும் வரவில்லை. அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் குறைவு, அடிக்கடி மாறக்கூடிய தெளிவற்ற கொள்கைகள் மற்றும் சாதகமற்ற வரிக்கொள்கைகள் காரணமாக இலங்கை முதலீடுகளுக்கு சாதகமற்ற சூழல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில்  ஒதுக்கப்பட்ட நிதியில் இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை 16.7வீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத நிலவரப்படி 28 வீதம் அதாவது கால் பகுதி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

அதேபோல், ‘தித்வா’ பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் நிதியில் இதுவரை 8 வீதம் போன்ற சிறிய சதவீதமே செலவிடப்பட்டுள்ளது. இதற்குப் பிரதான காரணம் நிதிப் பற்றாக்குறையை விட, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயலற்ற தன்மையும் பலவீனமுமாகும்.

கிராம மட்டத்திலான 100 சிறிய திட்டங்களை அடையாளம் கண்டு மக்களின் சாதாரண வாழ்க்கைக்கு நேரடியாகப் பாதிப்புச் செலுத்தும் துறைகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வதற்குப் பதிலாக, அரசாங்கம் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்காக 3 ஆண்டுகளில்  2 டிரில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது.டைல்ஸ், வாகனங்கள், சிமெந்தி போன்றவற்றுக்காக அதிக டாெலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், இதனால் பொதுமக்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை. இதன் பலன்கள் சில பெருநிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.

உலக வங்கியின் அறிக்கைகளின்படி இலங்கையில் கடுமையான வறுமை 30வீதமாக  உயர்ந்துள்ளதுடன், உலக உணவுத் திட்டத்தின்படி நாட்டின் 6 மில்லியன் மக்கள் தொகையினர் ஒரு வேளை சத்தான உணவைக் கூட பெற முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது. 18வீத வற் வரி போன்ற மறைமுக வரிகள் காரணமாக ஏழை, பணக்காரன் என்ற பாரபட்சமின்றி அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு முதல் 2025 ஜனவரி வரை வாகன இறக்குமதி முழுமையாகத் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் சுனாமி போல் மீண்டும் அது திறக்கப்பட்டது. உலகின் அதிஉயர் சொகுசு வாகனங்களான பிரித்தானிய மகாராணி பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் ரக வாகனங்கள் கூட எந்தத் தடையும் இன்றி நாட்டிற்குள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டது.

அரசாங்கம் இதன் மூலம் பெரும் வரி வருமானத்தை எதிர்பார்த்தாலும், எதிர்பார்க்கப்பட்ட வாகனப் பதிவு இடம்பெறாததால் அரசாங்கத்திற்கு கடுமையான இழப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி நம்மிடமிருந்த பெருமளவிலான வெளிநாட்டுச் செலாவணி வெளிநாடுகளுக்குச் சென்றது. இதனால் நாட்டின் கையிருப்பில் இருந்த பெருமளவிலான அந்நியச் செலாவணியை நாம் இழந்தோம்.

 2025 ஆம் ஆண்டில் இந்த வாகன இறக்குமதி மூலம் சுங்கத்திற்கு கிடைத்த வருமானம் 2551 பில்லியன்களாகும். ஆனால் 2026 செப்டம்பராகும்போது அது 2000 வரை குறைகிறது. வரும் ஆண்டில் அதைவிடவும் குறையும். ஏனெனில் புதிய வாகனப் பதிவுகள் 15வீதம் குறைந்துள்ளது.

எவ்வாறாயினும், நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்லும் இத்தகைய சூழ்நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக உணரக்கூடிய இந்த  நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

Previous Post

பதவி விலகத் தயார் : ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு

Next Post

ஐந்து பிக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை!

Next Post
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

ஐந்து பிக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை இருபது நாட்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்!

துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை இருபது நாட்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்!

தற்கொலை நெருக்கடிகளை தொடர்ந்து உயர்தர பாடசாலை மாணவர்கள் வெளிநடப்பு.

2016 Coconut Carnival

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி விருதுகளை வென்று வரும் ‘வன மடி’

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி விருதுகளை வென்று வரும் ‘வன மடி’

November 9, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

ஐந்து பிக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை!

November 9, 2026
பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்கிறது இலங்கை | ஜீ.எல். பீரிஸ் எச்சரிக்கை

பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்கிறது இலங்கை | ஜீ.எல். பீரிஸ் எச்சரிக்கை

November 9, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

பதவி விலகத் தயார் : ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு

November 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures