Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலைக்கு கால தாமதமாக வரும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்

June 9, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாடசாலைக்கு கால தாமதமாக வரும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பாடசாலைக்கு காலதாமதமாக வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்கவேண்டும்.

அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது இதுதொடர்பான் சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 8 ஆம் திகதி புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி எம்.பி. யான துஷார இந்துனில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளபோதிலும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் கடந்த காலங்களில் இடம்பெறாமையால் தரம் 1, 2 மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். ஏனெனில் இந்த தரங்களிலேயே மாணவர்களுக்கு எழுத்து எழுதுவதற்கு பழக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு 197 நாட்கள் பாடசாலை செயற்பாடுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால், மேல்மாகாணத்தில் 94 நாட்கள் மட்டுமே பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நடைபெற்றன.ஏனைய மாகாணங்களில் 117 நாட்கள் நடைபெற்றன. மேல் மாகாணத்திலேயே அதிக நாட்கள் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

2021 ஆம் ஆண்டு 229 நாட்கள் பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் நடைபெற வேண்டிய நிலையில், மேல் மாகாணத்தில் 102 நாட்களே பாடசாலைகளின் செயற்பாடுகள் நடைபெற்றன.

ஏனைய மாகாணங்களில் 143 நாட்கள் நடைபெற்றன. 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவனையின் 23 நாட்களில் 14 நாட்களே பாடசாலைகளின் செயற்பாடுகள் நடைபெற்றன.

2 ஆம் தவனையில் தற்போது 24 நாட்கள் உள்ளன. எனவே, எஞ்சிய தினங்களையும் சேர்த்து ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 44 நாட்கள் பாடசாலையின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

உயர்தரப்பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை கவனத்தில் எடுத்து நாம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

அத்துடன் இன்று நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைக் காணப்படுகிறது. அதேபோன்று பஸ் போக்குவரத்து குறைந்த்திருக்கின்றது.

இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பாதிப்படையும் வகையில் செயற்பட முடியாது. இதுதொடர்பாக நாம் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம்.

இதில் மாணவர்கள் – ஆசிரியர்கள் காலதாமதமாக பாடசாலைகளுக்கு சமுகமளிக்கும்போது, சீருடையில் பிரச்சினைகள் ஏற்படும் போது, மாணவர்கள் காலணிகளை அணியாதபோது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தவிர்த்து அவர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குமாறு நாம் கேட்டுள்ளோம். இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் என்றார்.

Previous Post

நள்ளிரவுடன் இருளில் மூழ்கப்போகும் இலங்கை – யாவும் ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கை

Next Post

இந்தியாவைத் தவிர எந்த நாடும் உதவிசெய்ய முன்வரவில்லை | பிரதமர் ஆதங்கம்

Next Post
ரணில் அமைக்கும் உயர் அதிகாரம் கொண்ட குழு!

இந்தியாவைத் தவிர எந்த நாடும் உதவிசெய்ய முன்வரவில்லை | பிரதமர் ஆதங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

June 21, 2026
தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures