Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பலமான அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரத்தை மக்கள் கொடுக்க வேண்டும்!

January 2, 2020
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தலின்போது மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து அமோக வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர். இதேபோன்று, எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் பெரும்பான்மை ஆதரவுடன் பலமான அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரத்தை, மக்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மருதானையிலுள்ள மத்திய கொழும்பு காரியாலயத்தில் புது வருட முதல் நாள் ஒன்றுகூடல் நிகழ்வு, நேற்று முன் தினம் (01) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மலர்ந்துள்ள 2020 ஆம் ஆண்டினை வரவேற்குமுகமாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில், அதிதிகளாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், சமயப் பெரியார்கள் உள்ளிட்ட பெருந்திரளான கொழும்பு வாழ் மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

பைஸர் முஸ்தபா இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் எடுத்த அரசியல் ரீதியிலான தீர்மானத்தை, பொதுத் தேர்தலிலும் எடுக்க வேண்டும்.அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. அந்தப்பணிகளில் அரச சேவையாளர்களும் கூட்டுப்பொறுப்புடன் மக்களுடன் நெருக்கமாக இணைந்து சேவைகளை வழங்க தங்களை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார அபிவிருத்தியையும் எமது இலக்கை நோக்கிய பயணத்தையும் தொடர முடியும். அத்துடன், பிரமுகர்கள், மதத்தலைவர்களின் ஆலோசனைகள், கருத்துக்களையும் மதித்து பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

கொழும்பு மாவட்டம், பல்லின சமூகங்கள் வாழ்ந்து வரும் மாவட்டமாகத் திகழ்கிறது. எனவே, இம்மாவட்டம் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். கொழும்பு மாவட்ட மக்கள் நல்லவர்கள். இவர்கள் இனவாதத்துக்கும் துவேஷத்துக்கும் ஒருபோதும் சோரம் போகாதவர்கள்.ஆனால், சில அரசியல்வாதக் கட்சிகள், இவர்களுக்கு ஏதாவது ஆசையைக்காட்டி, இவர்களை வழி கெடுக்க முனைகிறார்கள். இதற்காக எமது தன் நம்பிக்கையையும் சுய மரியாதையையும் இழந்துவிடக் கூடாது. நாம் எப்போதும் எம்மைப் பாதுகாத்துக் கொண்டு அடுத்தவர்களையும் மதித்து நடக்க வேண்டும்.

பிறந்திருக்கும் புத்தாண்டிலிருந்து நாட்டுக்காகவும், பொது மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கு அரசியல்வாதிகள் என்ற ரீதியில் நாம் கடமைப்பட்டுள்ளோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரின் தலைமையின்கீழ், தற்போது நாம் சிறந்த நிர்வாகம் ஒன்றைப் பெற்றுள்ளோம். இந்த நிர்வாகத்தின் கீழ், மக்களாகிய நீங்கள் தொடர்ந்தும் நிறையவே சேவைகளையும் தேவைகளையும் பெறவேண்டியவர்களாக இருக்கிறீர்கள். அதற்கு, எதிர்வரும் பொதுத்தேர்தலில் உங்களுடைய பாரிய பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நாம் குளிரூட்டிய அறைகளுக்குள் இருந்துகொண்டு ஒருபோதும் அரசியல் செய்யமாட்டோம். மக்களுடன் மக்களாக இருந்துகொண்டு அரசியல் செய்வதே எமது பணியாகும். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்குப் பின்பு, கொழும்பு வாழ் மக்களின் மேலும் பல தேவைகளை நிறைவேற்ற வேண்டியவர்களாக உள்ளோம். இவற்றையும் நிச்சயம் நாம் கவனத்தில் எடுத்து, தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

Previous Post

கடமைகளை பொறுபேற்றார் இராணுவத் தளபதி

Next Post

ஒரு இலட்சம் வேலை திட்டம் சம்பந்தமாக பல அரசியல்வாதிகள் முறைகேடு – கருணா

Next Post

ஒரு இலட்சம் வேலை திட்டம் சம்பந்தமாக பல அரசியல்வாதிகள் முறைகேடு – கருணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

ஆடையை கழற்றிக் காட்டவா?! – பாராளுமன்றத்தில் அர்ச்சுனா தடாலடி பேச்சு    

July 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures