ஈழத்து எழுத்தாளர் கலாநிதி இ.நா. ஸ்ரீஞானேஸ்வரன் எழுதிய பன்னாட்டுக் குற்றங்கள் என்ற கட்டுரை நூலின் அறிமுகமும் கலந்துரையாடலும் இன்று கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் கிளிநொச்சிக் கிளை தலைவர் அ. சத்தியானந்தனின் நெறிப்படுத்தலில் இடம்பெறும் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் தலைவர் கலாநிதி கே.ரி. கணேசலிங்கன் சிறப்புரை ஆற்றுகிறார்.











