பத்து வருடங்களிற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட அதிஉயர் வெப்பநிலைக்கு சமமான வெப்பம்!

வெப்ப எச்சரிக்க இரண்டாவது நாளாக ஒன்ராறியோவில் அமுலில் இருக்கின்றது.தொடர்ந்து இரண்டாவது நாளாக ரொறொன்ரோவில் வெப்பநிலை 32.4 C. ஐ எட்டியுள்ளது.
திங்கள்கிழமையின் புழுக்கமான வெப்பம் 10-வருடங்களிற்கு முந்திய வெப்பநிலையுடன் பொருந்திய வெப்பநிலை காணப்பட்டதாக கனடா சுற்று சூழல் தெரிவிக்கின்றது.
ஈரப்பதனுடன் 41ஆக உணரப்பட்டது. ஞாயிற்றுகிழமையில் இருந்து வெப்ப எச்சரிக்கை அமுலில் இருந்த போதிலும் இன்றைக்கு பின்னர் குளிராக காணப்படும் என மத்திய காலநிலை ஏஜன்சி தெரிவிக்கின்றது.
செவ்வாய்கிழமை வெப்பநிலை27- C ஆக வீழ்ச்சியடைந்து புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை 20 C.ஆக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திங்கள்கிழமை இரவு மழை தூறலிற்கான சாத்தியக்கூறுகள் 30-சதவிகிதமாக காணப்படுவதாகவும் சுற்று சூழல் தெரிவிக்கின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.நீண்ட நேரம் வெளியில் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்படக்கூடிய அயலவர்களையும் கவனிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றது.
ரொறொன்ரோவில் பல குளிரூட்டும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அவைகள் அமைந்திருக்கும் இடங்கள் பின்வருமாறு:

Metro Hall, 55 John St. (24 hours)
East York Civic Centre, 850 Coxwell Ave. (11 a.m. to 7 p.m.)
North York Civic Centre, 5100 Yonge St. (11 a.m. to 7 p.m.)
Driftwood Community Centre, 4401 Jane St. (11 a.m. to 7 p.m.)
Etobicoke Civic Centre, 399 The West Mall (11 a.m. to 7 p.m.)
McGregor Community Centre, 2231 Lawrence Ave. E. (11 a.m. to 7 p.m.)
Centennial Community Centre, 1967 Ellesmere Rd. (11 a.m. to 7 p.m.)

wave3

wave1

wave

wave2

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News