Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

படைப்புளுக்களுக்கு தீர்வாக பூச்சிக்கொல்லி முறையை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

January 23, 2019
in News, Politics, World
0

அரச, தனியார்துறை ஒத்துழைப்புடன் பூச்சிக்கொல்லி முறையை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

விவசாயத்துறைக்கு அச்சுறுத்தலாகவுள்ள படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு யுத்தத்திற்கு முகங்கொடுப்பதைப் போன்ற அர்ப்பணிப்பு மற்றும் வினைத்திறனுடன் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்காக ஒரு காலவரையறையை நிர்ணயித்து தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்க மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் பூச்சிக்கொல்லி முறைமையொன்றை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். படைப்புழு பரவி வருவதன் காரணமாக விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு முகங்கொடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், அச்செயலணி தினமும் ஒன்றுகூடி இந்த பேராபத்தை கட்டுப்படுத்துவதற்கு உடனடி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த ஜனாதிபதி செயலணியின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக மகாவலி பிரதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஒருவரையும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட பிரதிநிதி ஒருவரையும் இந்த செயலணியில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

அரச மற்றும் தனியார் விவசாய ஆராய்ச்சி துறைகள் மற்றும் கள அலுவலர்களின் பங்குபற்றுதலுடன் இந்த பேராபத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவசாய சங்கங்களுக்கும் விவசாய சமூகத்திற்கும் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அமைச்சர்களான பி.ஹரிஷன், தயா கமகே, இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் டி.எம்.எஸ்.திசாநாயக்க, கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.எம்.பி. வீரசேகர விவசாய பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.டபிள்யு.வீரகோன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Previous Post

பாராளுமன்ற சண்டை – விசாரணைக்குழுவில் மாவை சேனாதிராஜா

Next Post

எதிர்க்கட்சி தலைவர் தன் அலுவலகத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார்

Next Post

எதிர்க்கட்சி தலைவர் தன் அலுவலகத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் : அரச தரப்பு உறுதி

June 22, 2026
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures