Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீர் வளப் பிரதேசப் பாதுகாப்பு மற்றும் வனரோபா தேசிய மர நடுகைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.

October 11, 2017
in News, Politics
0
நீர் வளப் பிரதேசப் பாதுகாப்பு மற்றும் வனரோபா தேசிய மர நடுகைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.

நீர் வள பிரதேசப் பாதுகாப்பு மற்றும் வன ரோபா தேசிய மர நடுகை தேசிய திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று  (11) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கண்டி, தெல்தொட்ட கந்தேதன்ன குளத்திற்கருகே நடைபெறவுள்ளது.

இயற்கையை பாதுகாக்கும் எண்ணக்கருவின்படி ஜனாதிபதி அலுவலகமும் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் ‘புனருதய’ சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கிய நோக்கமான நீர்வள பிரதேசத்தை பாதுகாத்தல் மற்றும் வனப்பிரதேசத்தை அதிகரித்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘புனருதய’ சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணிப் பயன்பாட்டுக்கொள்கை திட்டமிடல் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

வனரோபா தேசிய மர நடுகைத் திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் மண் பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி உதவிகளை வழங்குதல் என்பனவும் ஜனாதிபதி தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

மா, கொய்யா, மாதுளை மற்றும் எலுமிச்சை போன்ற 3000 கன்றுகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், மரக் கன்றுகளை நடும் நிகழ்வில் பங்குகொள்ளும் பாடசாலை மாணவர்களுக்கு சுற்றாடல் தகவல் தொகுதி ஒன்றும் தொப்பியொன்றும் வழங்கப்படவுள்ளது.

1984 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் மக்களிடம் கையளிக்கப்பட்ட கந்தேதன்ன நீர்த் தேக்கத்தை அண்மித்த நீர்வள பிரதேசம் மண்ணரிப்புக்குட்பட்டுள்ளதால் அதற்குத் தீர்வாக மண் பாதுகாப்பு முறைமையைப் பின்பற்றுதல் மற்றும் வனப் பாதுகாப்பை ஏற்படுத்துதல் போன்றனவும் இந்த நிகழ்வுடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படவுள்ளது. நீர்வள பிரதேசப் பாதுகாப்புத் தொடர்பாக தயாரிக்கப்பட்ட கை நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

சுற்றாடல் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களின் எண்ணக் கருவின்படி வனரோபா தேசிய மர நடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் 2018 ஆம் ஆண்டாகும்போது இலங்கையின் வனப் பிரதேசத்தை 32 வீதமாக அதிகரிப்பது இதன் நோக்கமாகும்.

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் வனரோபா தேசிய மர நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரச, அரசசார்பற்ற மற்றும் தனியார்த்துறையின் பங்களிப்புடன் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக அறிவூட்டும் கருத்தரங்குகளும் மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம மட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இத் திட்டத்திற்கு பிரதேசத்திலுள்ள அனைத்து மக்கள் அமைப்புகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

கடைசியாக ரஜினியுடன் ஆட்டம் போடும் எமிஜாக்சன்

Next Post

வாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்து கொள்வது?

Next Post
வாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்து கொள்வது?

வாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்து கொள்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures