Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Life

நாளை செஞ்சோலை படுகொலையின் பதினொரு வருட நினைவு நாள் !!

August 13, 2017
in Life, News, Politics
0

2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்தநாளாகி இன்றோடு பதினொரு வருடங்கள் கடக்கின்றன ,தமிழர்களின் நெஞ்சு கனக்கும்துயரில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம் உலகத்திலேயே அதிகளவு பெண்கள் அதுவும்பாடசாலை மாணவிகள் ஒரே தடவையில் கொல்லப்பட்டது என்பது இதுவே வரலாறாக இருக்கின்றது.உலகின் எந்த மூலையிலும் இப்படி ஒரு செயல் நடக்கவில்லை அந்த சாதனையை இலங்கைஅரசாங்கம் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி அதிகாலை வேளை நடாத்தி முடித்திருந்தது .

1 (4)

வன்னிப்பகுதியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் ஆகிய கல்விவலய பாடசாலைகளில் இருந்துதலைமைத்துவ பயிற்ச்சிக்காக அழைத்து செல்லப்பட்ட 400 மாணவிகளில் 61 மாணவிகள் சில மணித்துளிகளில் மரணித்துபோனமைஈழமண்ணை சோகத்தில் மூழ்கடித்தது இந்த பயிற்சி நெறி ஓகஸ்ட் 11, 2006 இல் இருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால்பயிற்சிநெறி தொடங்கிய மூன்றாவது நாளே மாணவிகள் இலக்கு வைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டனர் – பேனா ஏந்திய கரங்கள் துண்டாடிப்போய் கிடந்தன ,துள்ளிக்குதித்துஓடிய கால்கள் தசை குவியலாக கிடந்தன,கனவுகளை சுமந்த நெஞ்சு குண்டு சிதறலால் கிழிக்கப்பட்டு குருதி கொட்டிக்கொண்டுகிடந்தது. அதிகாலை வேளை கிணற்றடியிலும் ,மலசல கூடத்திலும் ,சமையலறையிலும் ,தம்தம்கடமைகளில் இருந்த மாணவிகள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டனர் .

sencholai-padukolai

காலை வேளை வந்த கிபிர் விமானங்கள் ஆறு தடவைகள் குண்டுகளை கொட்டியதுகொட்டப்பட்ட குண்டுகள் திட்டமிட்டபடி முதல் குண்டு பிரதான வாயிலில் போடப்பட்டதுமாணவிகள் வாயிலின் ஊடாக ஓடமுடியாதபடி வகுக்கப்பட்ட திட்டத்தின் முதற்படி இதுஅடுத்த ஐந்து குண்டுகளும் கண் இமைக்கும் நேரத்துள் நான்கு திசைகளுக்கும்போடப்பட்டு ஆறாவது குண்டு மீண்டும் வாயிலில் போடப்பட்டது மாணவிகள் எந்த திசைஊடாகவும் வெளியே ஓடமுடியாதபடி திட்டமிட்டு குண்டுமழை பொழியப்பட்டது.

அங்கிருந்த நூற்றுக்கணக்கான மாணவிகளின் ஓலம் இப்போதும் காதில் ஒலிக்கிறதுஒவ்வொரு உடலாக அள்ளி எடுத்த கரங்கள் இப்போதும் ரத்தக்கறை மாறாது இருக்கிறது – உலகவரலாற்றில் நடந்த மறக்கமுடியாத பேரவலமாக தமிழன் வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது எம்இனிய பள்ளி குழந்தைகளின் பேரிழப்பு – அன்று ஆட்சியில் இருந்தவர்கள் இந்த கொலைபற்றி வாய்மூடி மெளனிகளாகவே இருந்தனர் ,இன்றுவரை அந்த பாரிய படுகொலை பற்றி எந்தவிதவிசாரணைகளோ அல்லது பொப்புக்கூறல்களோ இடம்பெறவில்லை.

sensolai

இந்த கொடும் கொலைத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளாக

மு/வித்தியானந்தா கல்லூரி மாணவிகள்

நிவேதனா தமிழ்வாசன்

அனோயா சுந்தரம்

தயானி கிரிதரன்

புவனேஸ்வரி புவனசேகரம்

மு/.குமுளமுனை மகாவித்தியாலைய மாணவிகள்

நிந்துயா நல்லபிள்ளை

ராஜிதா வீரசிங்கம்

கெளசிகா உதயகுமார்

சுகிர்தா சாந்தகுமார்

தாட்சாயணி விவேகானந்தம்

மு /புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவிகள்

பென்சிடியூலா மகாலிங்கம்

தர்சிகா தம்பிராசா

சுதர்சினி துரைலிங்கம்

மு/உடையார்கட்டு மகாவித்தியாலைய மாணவிகள்

கோகிலா நாகலிங்கம்

மதனி பாலகிருஸ்ணன்

விதுசா கனகலிங்கம்

நிருபா கனகலிங்கம்

அருட்செல்வி முருகையா

இந்திரா முத்தையா

கோகிலா சிவமாயஜெயம்

சாந்தகுமாரி நவரட்ணம்

கார்த்திகாயினி சிவமூர்த்தி

சத்தியகலா சந்தானம்

தபேந்தினி சண்முகராஜா

மு/விசுவமடு மகாவித்தியாலைய மாணவிகள்

நந்தினி கணபதிப்பிள்ளை

யசோதினி அருளம்பலம்

ரம்ஜா ரவீந்திரராசா

தீபா நாகலிங்கம்

தீபா தம்பிராசா

நிரந்ச்சலா திருநாவுக்கரசு

நிசாந்தினி நகுலேஸ்வரன்

தயாளினி தம்பிமுத்து

கேமாலா தர்மகுலசிங்கம்

சிந்துஜா விஜயகுமார்

ஜெசீனா சந்திரன்

மு /முல்லைத்தீவு மகாவித்தியாலைய மாணவிகள்

கம்சனா ராஜ்மோகன்

கலைப்பிரியா பத்மநாதன்

தனுஷா தணிகாசலம்

சுகந்தினி தம்பிராசா

வத்சலாமேரி சிவசுப்பிரமணியம்

திவ்யா சிவானந்தம்

பகீரஜி தனபாலசிங்கம்

கெலன்சுதாஜினி மார்க்குப்பிள்ளை

கிளி/தர்மபுரம் மகாவித்தியாலைய மாணவிகள்

நிவாகினி நீலையனார்

மங்களேஸ்வரி வரதராஜா

மகிழ்வதனி இராசேந்திரம்

மு /செம்மலை மகாவித்தியாலைய மாணவிகள்

கிருத்திகா வைரவமூர்த்தி

திசானி துரைசிங்கம்

வசந்தராணி மகாலிங்கம்

நிவேதிகா சந்திரமோகன்

மு /ஒட்டுசுட்டான் மகாவித்தியாலைய மாணவி

நிலோஜினி செல்வம்

கிளி /முருகானந்தா மகாவித்தியாலைய மாணவிகள்

பிருந்தா தர்மராஜா

சர்மினி தேவராசா

கிளி /பிரமந்தனாறு மகாவித்தியாலய மாணவி

லிகிதா குபேந்திரசிங்கம்

ஆகியோர் கொல்லப்பட்டனர் அப்போது பதவியில் இருந்த இராணுவப்பேச்சாளர் ஹெகலியரம்புக்வெல கொல்லப்பட்டவர்கள் மாணவிகள் இல்லை என்ற கருத்தை முன்வைத்திருந்தார் , சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலைஅமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இலங்கைப் போர் நிறுத்தக்கண்காணிப்புக் குழுவும் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவி மாணவிகளே என்பதை உறுதிசெய்தன.இருப்பினும் இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்,மற்றும் சர்வதேசசிறுவர் அமைப்புக்கள் ,பெண்கள் அமைப்புக்கள் என எவையும் நடவடிக்கை எடுக்க தவறிஇருந்தமை இந்த இன்றைய நாளில் சுட்டிக்காட்ட தக்க விடையம் .

-ப்ரியமதா பயஸ் –

Previous Post

மாவா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது

Next Post

ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை பொருட்படுத்த தேவையில்லை அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து

Next Post

ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை பொருட்படுத்த தேவையில்லை அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures