நான் திரிஷாவை காதலிக்கிறேனா? ராணா அதிரடி பதில்
நடிகை திரிஷா சில மாதங்களுக்கு முன் தொழிலதிபரை நிச்சயதார்த்தம் செய்து பின் திருமணத்தை நிறுத்தினார்.
நான் சினிமாவில் நடிப்பதில் தான் ஆர்வமாக இருக்கிறேன் இப்போதைக்கு திருமணம் இல்லை என சொன்ன திரிஷாவை சில வருடங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் ராணாவுடன் அதிகமாக பொது இடங்களில் பார்க்க முடிந்தது.
இதனால் இருவருக்கும் காதல் என செய்திகள் பரவ பின் இவ்விஷயம் காணாமல் போனது. தற்போது இது மீண்டும் தலை தூக்க நடிகர் ராணா இப்போது உண்மையை வெளியிட்டுள்ளார்.
எனக்கும் திரிஷாவுக்கும் காதல் என்று பல செய்திகள் வருகிறது. நான் அவரையோ, இல்லை வேறு எவரையும் காதலிக்கவில்லை.
நான் இப்போது பிசியாக இருக்கிறேன். ஹிந்தி படங்களில் நடிப்பதால் ஆறு மாதங்கள் மும்பையிலேயே தங்க வேண்டி இருந்தது.
இனி அடுத்து படப்பிடிப்புக்காக ஆறு மாதங்கள் அமெரிக்கா போக வேண்டியுள்ளது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் நான் யாரை திருமணம் செய்வது.
எனக்கு வரும் மனைவி இதனை புரிந்து நடப்பவளாக இருக்க வேண்டும். இன்னும் நல்ல இடத்திற்கு வந்த பிறகு தான் திருமணம் என ராணா ஹைதராபாத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.