Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் மீண்டும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு | அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

August 15, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நீரிழிவு நோய், இதய நோய், புற்று நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது எனவும் அதன் காரணமாக பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இது தொடர்பாக கருத்து கூறுகையில்,

குறிப்பாக அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு உக்கிரமடைந்துள்ளது. சிகிச்சைகளுக்கான தேவையான மருந்துகள் வைத்தியசாலைகள் அல்லது மத்திய மருந்து களஞ்சியசாலை நிலையங்களில் இல்லை.

தற்பொழுது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் மருந்துகள் தொடர்பான கட்டமைப்பை தொடர்ச்சியாக நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுத்து செல்வதற்கு பிரதான வைத்திய சாலைகளில் மருந்துகள் களஞ்சியப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் காணப்படவில்லை என்றால் பாரியதொரு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்.

மருந்துகளை நாட்டுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச நாடுகளுடைய ஒத்துழைப்புகள் கிடைக்கபெற்றது. இருப்பினும் குறித்த மருந்து பொருட்கள் முறையாக முகாமைத்துவம் செய்யப்பட்டதா? என்பது தொடர்பாக அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.

தேவையான பகுதிகளுக்கு அவை முறையாக பகிர்ந்தளிக்கப்பட்டதா? என்பது தொடர்பில் தற்போது கேள்வி எழுகிறது. தற்போது வைத்தியசாலைகளில் ஏற்பட்டு இருக்கும் மருந்து தட்டுப்பாடு களுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு குறிப்பாக ஒரு நோயாளிக்கு 5 மாத்திரை வகைகள் வீதம் வழஙக்கப்படுமாயின் தற்போது அண்ணளவாக இரண்டு அல்லது மூன்று மாத்திரை வகைகள் வீதம் மாத்திரமே வழங்கப்படுகிறது.

ஏனைய மருந்துகளை தனியார் மருந்தங்களில் கொள்வனவு செய்து கொள்ளுமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டாலும் அதனைக் கொள்வனவு செய்வதற்கு கூட முடியாத நிலைக்கு மக்கள் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

விலைகள் அதிகரிப்பு காரணமாக 3 வாரங்களுக்கு தேவையான மருந்துகளை பாவிக்க வேண்டிய நோயாளி இரண்டு நாட்களுக்கு தேவையான மருந்துகளை மாத்திரமே பெற்றுக்கொண்டு வீடு திரும்புகிறார்.

சந்தையில் பருப்பு விலை அதிகரித்தால் அதை சாப்பிடாமல் பிரிதொரு உணரை உண்ணலாம்.ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்த வேண்டிய ஒருவர் கட்டாயம் அனைத்து மருந்துகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக அண்மையில் அநுராதபுரம், பதுளை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

இது தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை உடன் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post

சீன கப்பல் விவகாரத்தில் ஒரு நாட்டை நிச்சயம் பகைத்துக்கொள்ள நேரிடும் | ஹர்ஷ டி சில்வா

Next Post

சீனாவின் யுவான் வான் கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சு விதித்துள்ள நிபந்தனை

Next Post
சீனாவின் யுவான் வான் கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சு விதித்துள்ள நிபந்தனை

சீனாவின் யுவான் வான் கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சு விதித்துள்ள நிபந்தனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures