Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடளாவிய ரீதியில் இன்று 10 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பணிப் பகிஷ்கரிப்பு

April 28, 2022
in News, Sri Lanka News
0
நீதிபதி மீதான தாக்குதல்: 25ம் திகதி பல இடங்களில் கண்டன போராட்டம்

ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர் சங்கம் சுகாதார சேவை சங்கம் துறைமுக சங்கம் அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவை சங்கம் வைத்திய ஆய்வு கூட நிபுணர் சங்கம் மின்சாரம் புகையிரதம் பெற்றோலியம் தபால் மற்றும் தோட்டத்  தொழிற்துறை சங்கம்   உள்ளிட்ட  பத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை (28 )பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு நாட்டில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.

சுகாதார சேவைக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக சுகாதார சேவை தரப்பினர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாமல் சேவை நிலையங்களில் கறுப்பு கொடியேற்றி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதுடன், கறுப்பு நிறத்திலான உடையணிந்து சேவைக்கு சமுகமளிக்கவுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு பாராளுமன்றில் கடந்த இரு வாரகாலமாக பயனற்ற வாதப்பிரதிவாதங்கள் மாத்திரமே இடம்பெற்றது.

இதேவேளை ஊழல் ஒழிப்பு அமைப்பின் தலைவர் வசந்த சேனாநாயக்க கூறுகையில்,

ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு எதிர்வரும் 6 ஆம் திகதி  பாரிய ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.

எதிர்வரும் வாரம்  4 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலும், அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையிலும் ஒரு தீர்மானத்தை முன்னெடுக்காவிடின் பாராளுமன்றத்தை அடுத்து எப்போது கூட்ட வேண்டும் என்பதை  நாட்டு மக்கள் தீர்மானிக்க நேரிடும்.

ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதற்காக எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள ஹர்த்தால் நடவடிக்கையினை 1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஹர்த்தால் நடவடிக்கை போன்று மாற்றியமைக்க கூடாது என்றார்.

1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஹர்த்தால் இலங்கையின் வரலாற்றில் முக்கியத்துவமிக்க ஒன்றாக விளங்கியது. அன்றைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்டப்பட்ட ஹர்த்தால் காரணமாக நாட்டில் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்ததுடன், நாடு மோசமாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அக்காலப்பகுதியில்  ஐக்கிய தேசிய கட்சி அரசு ஆட்சி செலுத்தியதுடன் ,பிரதமராக மறைந்த டட்லி சேனாநாயக்க விளங்கினார் . பின்னர் அவர் மனமுடைந்து தனது பதவியை இராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வைத்திய வைத்திய ஆய்வு கூட நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்  கூறுகையில்,

பலவீனமான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சுகாதார சேவை மேலும் பாதிக்கப்படும் என்பதால்  பணிபுறக்கணிப்பில் ஈடுபடாமல் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சுகாதார சேவை தரப்பினர் இன்றைய தினம் சேவை நிலையங்களில் கறுப்பு கொடி ஏற்றப்படுவதுடன் சேவைக்க கறுப்பு நிறத்திலான உடையில் சமுகமளிப்போம் என தெரிவித்தார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சிகளின் இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி உறுதி

Next Post

கருத்துச்சித்திரம்

Next Post
கருத்துச்சித்திரம்

கருத்துச்சித்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures