Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடித்த காட்சியை நீக்க சொன்ன முன்னணி நடிகர்

July 24, 2022
in Cinema, News
0
நடித்த காட்சியை நீக்க சொன்ன முன்னணி நடிகர்

‘ரவுடி பேபி’ புகழ் நடிகை சாய் பல்லவி கதையின் நாயகியாக நடித்து, வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு, வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ‘கார்கி’ படத்தில், தான் நடித்த காட்சியை முன்னணி நடிகர் ஒருவர் நீக்க சொன்ன விவரம் வெளியாகி இருக்கிறது.

‘தவமாய் தவமிருந்து’ எனும் மக்களால் மறக்க இயலாத படத்தில் நடிகர் சேரனின் சகோதரராக நடித்து தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் மிர்ச்சி செந்தில். தனியார் பண்பலை வானொலியில் இவரது குரல் பிரபலம் என்றாலும், திரையில் இவர் அறிமுகமான பின்னர் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். முன்னணி நடிகருக்கான இடத்தை பெறுவதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் இவர், ஐந்து தேசிய விருதுகளை வென்றிருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘கார்கி’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் படத்தில் இவர் நடித்த காட்சிகள் இடம் பெறவில்லை.

இது தொடர்பாக ‘கார்கி’ படத்தின் வெற்றியை உறுதியாக்கிய ரசிகர்களுக்காக படக்குழுவினர் ஒருங்கிணைத்த நன்றி நவிழும் விழாவில் இவர் பங்குபற்றி பேசுகையில், ” தமிழ் சினிமாவை அசத்திய திரைப்படம் ‘கார்கி’. பட மாளிகையில் வெளியாகும் முன்பு இப்படத்தை காணும் படி இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் எமக்கு அழைப்பு விடுத்தார். எமக்கு மட்டும் பிரத்யேகமாக காட்சியை திரையிட்டார்கள்.

அதன் போது இயக்குநரிடம், எமக்கு மட்டும் ஏன் இந்த திரைப்படத்தை பிரத்யேகமாக காண்பித்தீர்கள்? என கேட்டேன். அதற்கு இயக்குநர்,  ”நீங்கள் நடித்த காட்சி இப்படத்தில் ஒட்டாமல் துண்டாக தனித்து துருத்திக் கொண்டு இருக்கிறது.

உங்களிடம் இதனை காண்பித்து விட்டு நீக்கலாம் என்றிருக்கிறோம்.” என்றார்.  எம்முடைய மனதுக்குள் வியப்பு ஏற்பட்டது. ஒரே ஒரு காட்சியில் நடித்த எமக்கு, இவ்வளவு முக்கியத்துவம் அளித்து, என்னிடம் அனுமதி கேட்டது ஆச்சரியமாக இருந்தது. பிறகு இயக்குநர் கூறியது போலவே நான் நடித்த காட்சி படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு தொடர்பில்லாமல் தனித்திருந்தது தெரிந்தது.

அதனால் நானே மனமுவந்து நான் நடித்த காட்சியை நீங்கள் நீக்கிவிடலாம் எனக் கூறினேன். ‘சூரரைப் போற்று’ படத்தின் முன்னோட்டத்தில் மட்டும் நான் தோன்றுவேன். படத்தில் எனது காட்சி நீக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு தற்போது ஐந்து தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. அதேபோல் இப்படத்தில் நான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதால், இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

நடிகர் மிர்ச்சி செந்திலின் பெருந்தன்மையை போற்றுவதா..? அல்லது நீங்கள் நடித்த காட்சியை சரியான காரணத்துடன் உங்கள் அனுமதியுடன் நீக்குகிறோம் என்று வேண்டுகோள் விடுத்த இயக்குநரின்  நேர்மையான அணுகுமுறையை பாராட்டுவதா..? என தெரியாமல் திரை உலகினர் இவ்விருவரையும் மனமுவந்து பாராட்டுகிறார்கள். தமிழ் திரையுலகம் ஆரோக்கியமான பாதையில் பயணிப்பதாக இளம் படைப்பாளிகள் இந்த சம்பவத்தை முன்னிலைப்படுத்தி இணையத்தில் தங்களது எண்ணங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதனிடையே ‘கார்கி’ படத்தில் நடிகர் மிர்ச்சி செந்தில் நடித்த காட்சிகள் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாக்கிஸ்தானில் இலங்கை போன்று மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை – இம்ரான்கான்

Next Post

143 ஆவது நீலவர்ணங்களின் சமர் வெற்றிதோல்வியின்றி முடிவு

Next Post
143 ஆவது நீலவர்ணங்களின் சமர் வெற்றிதோல்வியின்றி முடிவு

143 ஆவது நீலவர்ணங்களின் சமர் வெற்றிதோல்வியின்றி முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures