Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய கீதத்தையும் கொடியையும் மனதார விரும்பவில்லை : தமிழரசு எம்.பி

December 7, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவது அரசியலமைப்பை மீறும் செயல்- ப. சத்தியலிங்கம்

எமது நாட்டின் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் நாங்கள் மனதார விரும்பவில்லை ஆனால் மதிப்பளிக்கின்றோம் என தமிழரசுக் கட்சியின் (ITAK) செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.

இன்று (06) நாடாளுமன்றத்தில் ஆற்றிய அவரது கன்னி உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாங்கள் எதிர்க்கட்சி என்ற பெயருடன் அமர்ந்துள்ளோம், ஆனாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முற்போக்கான செயற்பாடுகளுக்கும் நாம் உங்களுடன் இருப்போம்.

சிறுபராயத்தில் இருந்தே ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையுடன் வளர்ந்தவர்கள் நாங்கள். எனது தந்தை ஒரு பொதுநலவாதி, தனது வாழ்க்கை முழுவதும் தூய்மையான கம்யூனிசவாதியாக வாழ்ந்தவர். நான் அவரின் வளர்ப்பில் வந்ததால் இன, மத, குல வேறுபாடு எனக்கில்லை.

இறந்த உறவுகளை வணங்குதல்

ஆனால் இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்கள். அனைத்து விதத்திலும் இந்த நாட்டின் ஏனைய மக்களுடன் சமனாக நடத்தப்படவில்லை என்ற எண்ணத்துடன் வளர்ந்தவர்கள். அதனாலோ என்னவோ எமது நாட்டின் தேசியகீதத்தையும் தேசியக்கொடியையும் நாங்கள் மனதார விரும்பவில்லை, ஆனால் மதிப்பளிக்கின்றோம்.

இந்த மனநிலை எனக்கு மட்டுமல்ல எனது வயதையொட்டிய இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு உள்ளது. ஆனால் அதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலை ஏற்பட்டதையிட்டு பல சந்தர்ப்பங்களில் நான் மனவேதனை அடைந்துள்ளேன்.

தேசிய கீதத்தையும் கொடியையும் மனதார விரும்பவில்லை : தமிழரசு எம்.பி | Dislike The National Flag And National Anthem Mp

நான் விரும்பும் தேசியகீதத்தையும் நான் விரும்பும் தேசியக்கொடியையும் எனது வாழ்க்கைக் காலத்திற்குள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு இந்த அரசினுடையது. நான் சொல்ல விழையும் விடயத்தை நீங்கள் அனைவரும் புரிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில் சமாதானம் ஒவ்வோர் மனதிலும் இருந்து தொடங்கவேண்டும் என குறிப்பிட்டார். உண்மை, ஆனால் அதை எங்கிருந்து தொடங்கலாம் என்று சிந்தித்தால் அது உங்கள் பக்கத்திலிருந்துதான் தொடங்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

யுத்தத்தால் இறந்த உறவுகளை வணங்கும் நினைவேந்தலுக்கு நீங்கள் தடை போடவில்லை, அது உங்கள் நல்லெண்ணத்தை காட்டுகிறது. அதேநேரம் பலநூற்றுக்கணக்கான இறந்தவர்களின் உடல் புதைக்கப்பட்ட துயிலும் இல்லத்தில் இன்று இராணுவ முகாம் உள்ளது, இவ்விடத்தை விடுவிக்க நடவடிக்கை எடுத்து நல்லெண்ணத்தை காட்டுங்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி

அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யுங்கள். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு மனச்சாட்சியுடன் விடையை தேடுங்கள், அதனூடாக உங்கள் நல்லெண்ணத்தை காட்டுங்கள்.

மகாவலி – எல் வலயத்தில் மூவினமக்களுக்கும் காணிகளை பகிர்ந்தளியுங்கள். ஜனாதிபதி தலைமையில் வரும் அரசாங்கம் நாட்டில் காணப்படும் இருமுக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

தேசிய கீதத்தையும் கொடியையும் மனதார விரும்பவில்லை : தமிழரசு எம்.பி | Dislike The National Flag And National Anthem Mp

முதலாவதாக இந்த நாட்டில் காணப்படும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு இரண்டாவதாக பொருளாதார பிரச்சனைக்கான தீர்வு. முதலாவது பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இரண்டாவதுக்கு முழுமையான தீர்வொன்றை காணமுடியாது.

ஜனாதிபதி தனது உரையில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசவில்லை என எமது உறுப்பினர்கள் சொன்னாலும் இரு தினங்களுக்கு முன்னர் அவரை சந்தித்தபோது அரசியல் தீர்வு விடயத்தில் தனது நேர்மையான நல்லெண்ணத்தை வெளிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஆட்சிக்காலத்தில் புதிய அரசியல் யாப்பின் வரைபு தயாரிக்கப்பட்டபோது வழிநடத்தல் குழுவில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி தனது பங்களிப்பை வழங்கியிருந்தனர். அந்த முயற்சி தொடரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். உங்களுடன் சேர்ந்து முன்செல்ல நாங்கள் தயாராகவே உள்ளோம்.

பொருளாதாரக் கொள்கை

நாட்டில் இடம்பெற்ற யுத்தம், நாட்டின் வளங்களையும் இந்த நாட்டிற்கு உள்ள சந்தர்ப்பங்களையும் பிரதிபலிக்கும் பொருளாதாரக் கொள்கை இன்மை,  ஆட்சியாளர்களினதும் சகபாடிகளினதும் ஊழல், துஸ்பிரயோகம், வீண்விரயம் என்பவையே பொருளாதார பிரச்சினை ஏற்பட காரணமாகும்.

யுத்தம் முடிவிற்கு வந்து 15 வருடங்களாகிவிட்டது. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மொத்த தேசிய வருமானத்தில் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு எவ்வளவு?

தேசிய கீதத்தையும் கொடியையும் மனதார விரும்பவில்லை : தமிழரசு எம்.பி | Dislike The National Flag And National Anthem Mp

இன்று எமது மக்களின் பொருளாதாரம் மிக நலிவடைந்துள்ளது. 15,000 இற்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள், 75,000 விசேட தேவைகள் உள்ள மக்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் என சமூகத்தில் 1/3 பகுதியினர் ஏனையவர்களின் உதவியின்றி சுயமாக எழுந்து நிற்க முடியாதவர்கள்.

எனவே வடக்கு- கிழக்கு மாகாணங்களில் விசேட பொருளாதார மீட்சித் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசிற்குள்ளது, அதற்கான முயற்சியில் உங்களுக்கு கை கொடுக்க நாங்கள் உள்ளோம்.

தொடர்ந்தும் நிவாரணத்தை நம்பி வாழும் மற்றவர்களில் தங்கிவாழும் சமூகத்தை உருவாக்காதீர்கள். அரசாங்கத்தாலும் சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்களை ஆராய்ந்து பாருங்கள். அவற்றில் வெற்றியடைந்த திட்டங்கள் எத்தனை?

வெள்ள அனர்த்தம் 

தமது சொந்த உழைப்பில் வாழும் சமூகத்தை கட்டியெழுப்ப பொருளாதார திட்டங்களை தீட்டுங்கள். பாழடைந்த குளங்களை புனருத்தாரணம் செய்து விவசாயக் காணியற்ற குடும்பங்களிற்கு குறைந்தது 2 ஏக்கர் வயல் காணிகளை வழங்குங்கள். இவ்வாறான திட்டங்கள் வெற்றியடைய நாமும் உங்களுடன் சேர்ந்து உழைக்க ஆயத்தமாக உள்ளோம்.

தேசிய கீதத்தையும் கொடியையும் மனதார விரும்பவில்லை : தமிழரசு எம்.பி | Dislike The National Flag And National Anthem Mp

சர்வதேச சட்டத்திற்கு முரணாக ஆட்கடத்தல்காரர்களால் கடத்திச்செல்லப்பட்டு ரஸ்ய இராணுவத்தில் சிலர் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுவித்து தருமாறும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த அவர்களது உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

திட்டமிடப்படாத கட்டுமானங்களும், வடிகால் அமைப்பு சீரின்மையும் அனுமதியற்ற கட்டிட நிர்மானங்களும் வெள்ளமேற்பட முக்கிய காரணங்களாகும். பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

இறுதியாக நாங்கள் இந்த நாட்டின் பூர்வ குடியாக, ஒரு தேசிய இனமாக எங்களின் அடையாளங்களை பேணிக்கொண்டு ஒரு பன்முகத்தன்மை உள்ள வளமான நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்“ என தெரிவித்தார்.

Previous Post

கனடா – ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்க்காரம்

Next Post
காய்ச்சல், வயிற்றோட்டத்தால் 9 மாதப் பெண் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்க்காரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026

Recent News

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures