Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘தி லெஜண்ட்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

May 31, 2022
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘தி லெஜண்ட்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ‘தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ உரிமையாளர் சரவணன் அருள் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘உல்லாசம்’, ‘விசில்’ ஆகிய படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இதில் புதுமுக நடிகர் சரவணன் அருள் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஊர்வசி ரவூத்லா நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த நடிகர்கள் விஜயகுமார், பிரபு, மூத்த நடிகை லதா, ரோபோ ஷங்கர், மயில்சாமி, நடிகை ஐரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். த லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தொழிலதிபர் சரவணன் அருள் இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கிறார்.

‘தி லெஜண்ட்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. முன்னோட்டத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் சரவணன் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரம்மாண்டமான பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள், அரங்க வடிவமைப்பு ஆகியவை இடம் பெற்றிருப்பதால் ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

நுகர்வோர் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பு என்பதாலும், அதன் உரிமையாளர் சரவணன் அருள் நடிப்பில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படத்திற்கு திரையுலக வணிகர்களிடமும் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Previous Post

சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்.. ஷாக்கான ராம் சரண்

Next Post

அமாவாசையில் முன்னோர்களை வழிபட்டால் தீராத வியாதிகள் தீரும்

Next Post
அமாவாசையில் முன்னோர்களை வழிபட்டால் தீராத வியாதிகள் தீரும்

அமாவாசையில் முன்னோர்களை வழிபட்டால் தீராத வியாதிகள் தீரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures