Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருப்பதியில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையில் தனி லட்டு தயாரிக்க ஆலோசனை

September 12, 2022
in News, World, ஆன்மீகம், இந்தியா
0
திருப்பதியில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையில் தனி லட்டு தயாரிக்க ஆலோசனை
  • லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது.
  • சாமியை பல மைல்கள் தூரத்திலிருந்து தரிசிக்க வரும் பக்தர்களை தேவஸ்தான அதிகாரிகளும், ஊழியர்களும், ஸ்ரீவாரி சேவாவினரும் கர்ப்பக்கிரகம் அருகே வரும்போது அவசர அவசரமாக தள்ளி விடுகின்றனர்.

திருப்பதி திருமலை அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும்போது, திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது. லட்டு பிரசாதத்தை என் போன்ற சர்க்கரை நோயாளிகள் உண்ண முடியாது.

ஆதலால், சர்க்கரை நோயாளிகள் கூட லட்டு பிரசாதத்தை சாப்பிடும் பாக்கியத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு அதிகாரி தர்மா ரெட்டி பதிலளிக்கையில், சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக லட்டு தயாரித்து வழங்க ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்‌.

திருப்பதியை சேர்ந்த பக்தர் ஒருவர் கூறும்போது:-

சாமியை பல மைல்கள் தூரத்திலிருந்து தரிசிக்க வரும் பக்தர்களை தேவஸ்தான அதிகாரிகளும், ஊழியர்களும், ஸ்ரீவாரி சேவாவினரும் கர்ப்பக்கிரகம் அருகே வரும்போது அவசர அவசரமாக தள்ளி விடுகின்றனர். அவர்களுக்கு பொறுமையே இருப்பதில்லை.

இதுகுறித்து கேட்டால் “நீ யாரிடம் வேண்டுமாலும் புகார் செய்” என திமிராக பதிலளிக்கின்றனர். இதுகுறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பக்தர்களை தள்ளி விடக்கூடாது என பல முறை எச்சரித்துள்ளோம். ஆயினும் சிலர் அதுபோல் கடிந்து நடந்துகொள்வது வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து மீண்டும் அவர்களிடம் எச்சரிக்கை செய்யப்படும் என தர்மா கூறினார்.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் திருப்பதி கோவில் வரலாற்றிலேயே அதிகபட்சமாக ஒரு மாத உண்டியல் காணிக்கை ரூ.140.34 கோடியாக பதிவாகி உள்ளது.

இந்த மாதத்தில் 1.05 கோடி லட்டு பிரசாதம் விற்பனையாகி உள்ளது. 22.22 லட்சம் பக்தர்கள் சாமியை தரிசித்துள்ளனர்.

10.85 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Previous Post

இலங்கையில் அரசாங்க ஊழியர்கள் எடுக்கும் முடிவு!

Next Post

அவுஸ்திரேலியாவில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள்

Next Post
அவுஸ்திரேலியாவில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள்

அவுஸ்திரேலியாவில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய ப்ரபாத் ஜயசூரியவுக்கு கண்டன எச்சரிக்கை

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய ப்ரபாத் ஜயசூரியவுக்கு கண்டன எச்சரிக்கை

August 25, 2026
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

தேர்தல் வழக்கு : தமிழக முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

August 25, 2026
“இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம்” : யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 

“இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம்” : யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 

August 25, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தயார் நிலையில் உள்ளது – நளிந்த ஜயதிஸ்ஸ 

August 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures