Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தியாக தீபம் திலீபனுக்கு சபையில் அஞ்சலிசெலுத்தினார் – ரவிகரன் எம்.பி

September 25, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்தது

தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (24) உரையாற்றும்போதே அவரால் இவ்வாறு அஞ்சலிசெலுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் இறையாகி எங்கள் உயிரோடும் உணர்வோடும் வழியோடும் இரண்டு அறக் கலந்து வாழும் எங்கள் தியாக தீபம் திலீபனை வணங்கி இப்பேரவையில் அஞ்சலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த கால எங்களின் காயங்கள் ஆற்றப்படாமல் இந்த தீவிலே நல்லிணக்கம் சாத்தியமாகாது. புரிந்தவனே நடுநிலையாகி தீர்ப்புச்சொல்லும் உள்ளகப் பொறிமுறையில் எங்கள் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

அகிம்சை வென்ற இடம் வேண்டுமானால் இந்தியாவாக இருக்கலாம். ஆனால், அந்த இந்தியாவும் பார்த்திருக்க அகிம்சையையும் தோற்கடித்தது இலங்கை அரசு.

பயங்கரவாத மற்றும் அவசர காலச் சட்டங்களின் கீழ் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்; வடகிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துங்கள்

என்று கோரி பன்னிருநாள் பசித்திருந்து நீருமின்றி நோன்பிருந்து எங்களுக்காய் – எம் இனத்துக்காய் தன் இன்னுயிரை ஆகுதியாக்கிய எங்கள் தியாக தீபம் திலீபன் உயிர் நீத்து இன்றளவில் 39 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எங்களுக்காக இன்னும் பசித்திருக்கிறான்.

இந்தப்பேரவையிலே, எங்கள் அகிம்சைச்சுடருக்கு – இறையாகி எங்கள் உயிரோடும் உணர்வோடும் வழியோடும் இரண்டு அறக் கலந்து வாழும் எங்கள் தியாக தீபம் திலீபனை வணங்கி இப்பேரவையில் அஞ்சலிக்கிறேன்.

Previous Post

ஆசிய விளையாட்டு விழாவில் எதிர்பார்த்த பதக்கங்கள் இலங்கைக்கு கிடைப்பது சந்தேகம்

Next Post

நடிகர்கள் நிவின்பாலி – சூரி இணைந்து தோன்றும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post
நடிகர்கள் நிவின்பாலி – சூரி இணைந்து தோன்றும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர்கள் நிவின்பாலி - சூரி இணைந்து தோன்றும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர்கள் நிவின்பாலி – சூரி இணைந்து தோன்றும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர்கள் நிவின்பாலி – சூரி இணைந்து தோன்றும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

September 25, 2026
தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்தது

தியாக தீபம் திலீபனுக்கு சபையில் அஞ்சலிசெலுத்தினார் – ரவிகரன் எம்.பி

September 25, 2026
ஆசிய விளையாட்டு விழாவில் எதிர்பார்த்த பதக்கங்கள் இலங்கைக்கு கிடைப்பது சந்தேகம்

ஆசிய விளையாட்டு விழாவில் எதிர்பார்த்த பதக்கங்கள் இலங்கைக்கு கிடைப்பது சந்தேகம்

September 24, 2026
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரி சவூதி தூதுவரை சந்திக்க தமிழ் – முஸ்லிம் கட்சிகள் அனுமதி கோரிக்கை

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரி சவூதி தூதுவரை சந்திக்க தமிழ் – முஸ்லிம் கட்சிகள் அனுமதி கோரிக்கை

September 24, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures