Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டக்ளஸ் கொலை முயற்சி – 6 பேருக்கு சிறை

October 31, 2017
in News, Politics
0

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 06 பேருக்கு 10 1/2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, களுத்துறை சிறைக்கு விஜயம் செய்திருந்த வேளையில், கூரிய மற்றும் மழுங்கிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முற்பட்டமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகள் தொடர்பில், சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கமைய, 06 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றினால் நேற்று  வழங்கப்பட்டது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் களுத்துறை சிறையிலிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களால் குறித்த கொலை முயற்சி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் 16 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் வடக்கு – கிழக்கு மாகாண நிதி பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்ட அன்டன் எமில் லக்ஷ்மி காந்தன் உள்ளிட்ட 09 பேர் நிரபராதிகள் என இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எமில் காந்தன் உள்ளிட்ட பிரதிவாதிகளில் பெரும்பாலானோர் இன்றிய நிலையில் குற்றவியல் சட்டத்தின் 241 ஆவது பிரிவிற்கு அமைய, குறித்த வழக்கை நடாத்துதுவதற்கு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
இதேவேளை, குறித்த வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு, நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்ததோடு, குற்றத்தை ஒப்புக்கொள்ளாத பொன்னுசாமி ஶ்ரீ ஸ்கந்தராஜா எனும் 14 ஆவது பிரதிவாதிக்கு எதிராக வழக்கு விசாரணையை நடாத்துவதற்கு நீதிமன்றம் முடிவு செய்திருந்தது.
நேற்றையதினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்த பிரதிவாதியான ஶ்ரீ ஸ்கந்தராஜாவிடம் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. ஆயினும் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தான் நிரபராதி என நீதிமன்றத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
ஆயினும் இவ்வழக்கு விசாரணைகளின் இறுதி வரை நீதிமன்றிற்கு ஆஜரான ஒரேயொரு பிரதிவாதி ஶ்ரீ ஸ்கந்தராஜா என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத ஏனைய குற்றவாளிகளை கைது செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று   (30) உத்தரவிட்டது.

Previous Post

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கை வருகை .

Next Post

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிசார் குவிப்பு !!

Next Post
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிசார் குவிப்பு !!

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிசார் குவிப்பு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures